ஆளுகையும் நிர்வாகமும்

நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபை நிறுவனத்தின் ஆளுகைக்குப் பொறுப்பாக உள்ளது. நூலகத்தின் தன்னார்வலர்களிலிருந்து பல்வேறு குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இக்குழுக்களின் பிரதிநிதிகள் வழிகாட்டுநர் சபையில் அங்கம் வகிக்கின்றனர். நூலக நிறுவனத்தின் இயக்குனர் சபையால் நியமிக்கப்பட்ட இயக்குணருக்கு நிர்வாகத்தின் தலமை நிகழ்ச்சித்திட்ட அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்பார்.

வழிகாட்டுநர் சபை

நூலக நிறுவனத்தினுடைய நிர்வாகம் மற்றும் சுமூகமான செயற்பாடுகள் தொடர்பான அனைத்துக்கும் வழிகாட்டுநர் சபை பொறுப்புடையதாகும். மேலும் நிகழ்ச்சித்திட்ட செயற்பாடுகள் பற்றிய அனைது ஆலோசனைகள், மதிப்பீடுகள் மற்றும் சிபாரிசுகளை இயற்குணர் சபைக்கு வழங்கும் விழிப்புடன் கூடிய ஆலோசனைச் சபையாக தொழிற்படுகிறது.

அத்துடன் வழிகாட்டுநர் சபையானது நிர்வாக மூலோபாயம், திட்டமிடல், நிதித் திரட்டல் மற்றும் வள மேம்பாடு, ஆலோசனைக் கட்டமைப்பு போன்றனவற்றுக்கு பொறுப்புடையது. மேலும் நிதித் திரட்டல், தொழில்நுட்பம், தகவல் சேவைகள், ஆவணப்படுத்தலும் பாதுகாத்தலும் மற்றும் ஆலோசனை மற்றும் சமூக அபிவிருத்தியானது முக்கியபகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வழிகாட்டுநர் சபையினுடைய செயற்பாடுகள் மற்றும் திடமான தீர்மானங்களை ஆவணப்படுத்துதல், தொடர்ச்சியைப்பேணுதல், செயற்படுத்துதல் முதலியவற்றுக்கு தலமை நிகழ்ச்சித்திட்ட அதிகாரியானவர் நியமிக்கப்படலாம்.

இயக்குனர் சபை

நூலக நிறுவனத்தின் கொள்கை வகுப்பு மற்றும் ஆளுகை நிலைக் குழுவாக இயக்குனர் சபை காணப்படுகிறது. நூலகத்தின் நிர்வாகம் மற்றும் நிதியம் ஆகியவற்றுக்கான அவசியமான அதிகாரங்கள் அனைத்தையும் இயற்குணர் சபை கையாளும். நூலகக் கிளைகளின் இயக்குனர் சபைகள், வழிகாட்டுநர் சபை, பொது உறுப்புகள் மற்றும் ஏனைய வளங்களிடமிருந்து பெறப்பட்ட முடிவுகளை இறுதிப்படுத்தும் மற்றும் ஒப்புதல் கொடுக்கும் அனைத்து உரிமைகளையும் இயக்குனர் சபை வைத்திருக்கிறது.

துறைசார் அணிகள்

நிறுவனத்திற்கு நெருக்கடியான சில பகுதிகளில், பாரிய அனுபவசாலிகளுடன் இணைந்து பணிஆற்றுவதற்கு நூலக நிறுவனம் துறைசார் அணிகளை உருவாக்கும். ஆய்வும் ஆவணப்படுத்தலும், தொழில்நுட்பவியல், ஆவணப்படுத்தலும் பாதுகாத்தலும், தகவல் சேவைகள், சமூக ஆலோசனைக் கட்டமைப்பு மற்றும் வள அபிவிருத்தி முதலிய ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இவ் ஒவ்வொரு பகுதிக் குழுவும் ஓர் தன்னார்வலர் அணியுடன் இலங்கையை மையப்படுத்தி தொழிற்படும்.