இணையுங்கள்

நூலக நிறுவனமானது தன்னார்வலர்களின் தலைமையில் இலாபநோக்கற்ற நிறுவனமாக செயற்படுகிறது. இதனுடைய செயற்பாடுகளின் வளர்ச்சியும், நிலைநிறுத்துகையும் உங்களைப் போன்ற பங்களிப்பாளர்களின் வரிசையிலேயே தங்கியுள்ளது. எங்களுடைய நோக்கங்களிலும் செயற்பாடுகளிலும் பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் அனைவருக்கும் வழங்குகின்றோம். கீழ்வரும் வழிகளில் நீங்கள் எங்களுக்கு பங்களிப்புச் செய்யலாம்.

உள்ளடக்க பங்களிப்பு

நூலக நிறுவனம் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள், வீடியோ பிடிப்பாளர்கள், புலமைவாதிகள், நூலகர்கள், ஆவணப்படுத்துணர்கள், மற்றும் எமது செயற்றிட்டங்களுக்கான உள்ளீடுகள், வளங்கள் மற்றும் தகவல்கள் வழங்களில் பங்களிப்புச் செய்கின்ற பொது மக்கள் அனைவரின் மீதே தங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணிம தமிழ்க் களஞ்சியமாக உருவாவதில் உங்களுடைய கைகளையும் இணைத்துக் கொள்வதற்காக அனைத்து உள்ளடக்க உருவாக்குணர்களையும் அழைக்கின்றோம்.

நிபுணத்துவ பங்களிப்பாளர்

நூலக நிறுவனம், உலகின் முன்னேற்றகரமான எண்ணிம ஆவணப்படுத்தல் நிறுவனமாக இருப்பதனை நோக்கமாக கொண்டுள்ளது. அதற்காக எண்ணிமப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் அபிவிருத்தி, நூலகவியல், தகவல் விஞ்ஞானம் மற்றும் ஆவணப்படுத்தல் விஞ்ஞானம் முதலிய துறைகள் உள்ளடங்கலாக பரந்த அளவிலான துறைகளின் நிபூணத்துவப்பங்காளர்களை, எமக்குத்தேவையான உள்ளடக்கம் மற்றும் வழிகாட்டுதல்களை மதிப்புமிக்க தரங்களுடனும், முறைமையியல்கல்ளுடனும், மற்றும் தொழில்நுட்பத்துடனும் வழங்குவதற்காக சார்ந்திருக்கிறது.

வளங்களின் பங்களிப்பு

நூலக நிறுவனம் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாக, தான் செய்துகொண்டிருக்கும் செயற்பாடுகள் மற்றும் நிலைபேண்தகைமைக்காக நிதிப்பங்களிப்பாளர்களது வலையமைப்பையே சார்ந்துள்ளது. நூலக நிறுவனத்திற்கு தேவைப்படும் உபகரணங்களையோ அல்லது வசதிகளையோ வழங்குதலின் ஊடாக பங்களிப்புச் செய்தும், குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்காக பணம் வழங்கியும், சில சிறிய நிதிப் பங்களிப்பை செய்தும் நிறுவனத்தின் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்யலாம்