எம்மைப் பற்றி

பணி இலக்கு

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், சொத்துக்கள் மற்றும் சிறப்புக்கள், விழுமியங்களை ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச்செய்தல் மற்றும் அறிவுருவாக்கத்திலும் கற்றலிலும் ஈடுபட திறமைமிக்க சமுதாயங்களை வலுவூட்டல் போன்றன நூலக நிறுவனத்தின் பணி இலக்காக அமைகிறது.

நோக்கங்கள்

  • விளிம்பு நிலை, மைய சமூகங்களினது இனவரவியல் மற்றும் அறிவு மையங்களையும், பேச்சுமொழிகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், சடங்குகள், நாட்டாரியல், விளையாட்டுக்கள், சுதேசிய மருத்துவம், சட்ட முறைமைகள், நிர்வாக முறைமைகள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்ற அறிவுத் தளங்களையும் ஆவணப்படுத்தல், பாதுகாத்தல், எண்ணிமப்படுத்திப் பேணுதல்.
     
  • இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எழுத்து மூலமாக மற்றும் அச்சு, பல்லூடக, இலத்திரனியல் சார்ந்ததாக காணப்படும் வளங்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், எண்ணிமப்படுத்திப் பேணுதல், அவ்வகைச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல்.
     
  • அறிவு மற்றும் தகவல் சேவைகளை உறுதியாக மற்றும் இலவசமான திறந்த முறையில் வழங்கி, அதனூடாக இலங்கைத் தமிழ் பேசும் சமுகங்கள் தொடர்பான ஆய்வு, அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும், கல்வியியலுக்கும் ஆதரவளித்தல்.
     
  • தொடர்பாடல், வலையமைப்பாக்கம் மற்றும் இணைந்து செயலாற்றுதல் மூலம் மேம்பட்ட ஆவணவியல், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல், தொழில்நுட்பங்கள், செயலாக்கங்கள், துறைசார் குழுமங்களை கட்டமைத்தல்.

தொலைநோக்குத் திட்டம்

http://noolahamfoundation.org/wiki/index.php?title=Roadmap_2020