செயலாக்கம் 26: எண்ணிம நூலகம் & ஆவணகம் (தகவல் கட்டமைப்பு)/மே 31 2020 - மீதரவுகள் உரையாடல்

From Noolaham Foundation
< செயலாக்கம் 26: எண்ணிம நூலகம் & ஆவணகம் (தகவல் கட்டமைப்பு)
Revision as of 09:12, 4 June 2020 by Natkeeran (talk | contribs) (Created page with "கலந்து கொண்டோர்: கலந்து கொள்ள முடியாதோர்: சந்திப்பு முறை: ஸ்கைப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

கலந்து கொண்டோர்: கலந்து கொள்ள முடியாதோர்: சந்திப்பு முறை: ஸ்கைப்


முதலாவதாக, நாம் எமது மீதரவுப் பரிந்துரைகளை Metadata Object Description Schema (MODS) மற்றும் Rules for Archival Description (RAD) அனைத்துலக சீர்தரங்களின் அடிப்படையில், ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தின் Tamil Metadata Dictionary இனைப் பின்பற்றி ,அமைக்கிறோம். இந்த மீதரவு MARC, Dublin Core போன்றவற்றுக்கு cross walk செய்யவதற்கான எல்லாத் தகவல்களையும் கொண்டிருக்கும்.

Type of Resource -> Document Genre

Type of Resource மேல் நிலையிலும், Document Genre துல்லியமாகவும் ஒர் ஆவண வகையை விபரிக்க உதவும். Genre பட்டியலை நாம் இறுதிசெய்யவுள்ளோம். உசாத்துணைகள் Genre பட்டிலலில் இடம்பெறும்.

ஒரு படைப்பின் (work) பல expressions/Manifestations

ஒரு படைப்பு (எ.கா ஒரு நூல், பாடல்) பல வெளிப்படுத்தல்களை கொண்டு இருக்கலாம். எ.கா ஒரு நூல் பல பதிப்புக்களைக் கொண்டு இருக்கலாம். மொழிபெயர்ப்பைக் கொண்டு இருக்கலாம். நாம் ஒவ்வொன்றையும் தனி வளமாக கருதுவோம். ஒன்றும் முதன்மைப்படுத்தப் பட மாட்டாது. ஒவ்வொன்றுக்கும் மீதரவு இடப்படும். தேடலில் தனியாக வரும். ஆனால் ஒரு படைப்புக்கு செல்லும் பொழுது, நாம் Related Resources (தொடர்புடைய வளங்கள்) ஊடாக பிறவற்றையும் இலகுவாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.

தொடர்புடைய வளங்கள்

இது ஒரு படைப்பின் பல expressions அல்லது Manifestations ஐ இணைக்கும் ஒரு முறையாகும்.

மேலதிக குறிப்பு: படைப்பு -> வெளிப்படுத்தல் -> உருவமெடுக்கை -> உருப்படி Work -> Expression -> Manifestation -> Item https://www.railslibraries.info/system/files/Anyone/mtg/2018/2018-08-20/152953/Updated%20Slides%20for%20WEMI%20webinar.pdf https://www.loc.gov/catdir/cpso/frbreng.pdf

தொடர்பாக நானும் தமிழினியும் இன்னும் அலசி வருகிறோம். நூலகத்தின் நாம் எப்பொழுது ஒரு expression அல்லது manifestation ஊடாகவே வேலை செய்வோம். ஆனால் பாட்டி வடை சுட்ட கதை போன்ற, ஒரு குறிப்பிட்ட expression இல்லாதவற்றையும் ஆவணப்படுத்த முடியுமா என்று நாம் யோசிக்க வேண்டும். மேலதிக உறவுகளை விளங்கிக் கொள்வது, நாம் தொடர்புடைய வளங்கள் கட்டமைக்க மிகவும் உதவும்.

உள்ளடக்க அணுக்க வகை

உள்ளடக்க அணுக்க வகை மீதரவு இணைக்கப்பட்டு, அதன் ஊடகாக ஒரு வளம் Access Type தொடர்பாக பயனர்களுக்கு நாம் தெரியப்படுத்துவோம். தனி மீதரவு வளங்களுக்கென தனி genre இராது.

  • திறந்த அணுக்கம் - Open Access
  • உசாத்துணை அணுக்கம் - Available for Reference
  • இருக்குமிட தகவல் உண்டு - Holdings Info Known
  • மீதரவு மட்டும் - Metadata Only


Controlled Vocabularies

முன்மொழிவில் முன்வைக்கப்பட்ட Controlled Vocabularies ஏற்கப் பெற்றன.