News/2011/02.10.2011

From Noolaham Foundation
< News
Revision as of 05:59, 6 December 2011 by Gopi (talk | contribs) (02.10.2011)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Details

  • காலம்: 02 .10 .2011 (ஞாயிற்றுகிழமை)
  • நேரம்: 9 .00 மு.ப
  • இடம்: விநோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச் சங்கம்


நூலக நிறுவனத்தின் கொழும்பு பிரிவின் 5 ஆவது மாத ஆவணப்படுத்தல் செயலமர்வு நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்விற்கு அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவரையும் செல்வி. ஆர்த்திகா அருந்தவநாதன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செயலமர்வினை திரு. சிவானந்தமூர்த்தி சேரன் தலைமை உரையை நிகழ்த்தித் தொடக்கி வைத்தார். பின்னர் நூலக நிறுவனத்தின் அங்கத்தவர்ளால் உருவாக்கப்பட்ட ’’கடந்து வந்த பாதை...’’ என்னும் காணொளிக் காட்சி அளிக்கப்பட்டது. அதில் இதுவரை நூலக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வுகள், நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. அசோகா நிறுவன ஆலோசகரான காயத்திரி அவர்கள் இளைஞர்களின் முயற்சியையும் பெண்கள் எதற்கும் பின் செல்லாமல் முன் வரவேண்டும் என்பதையும் பற்றி கூறி தொடக்கி வைத்தார். செயலமர்வானது திரு. சிவகுமார் பிரகாஷ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணிம நூலகம் பற்றிய கண்ணோட்டத்துடன் தொடர்ந்தது. இதில் நூலக நிறுவன உருவாக்கம், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இனிவரும் முயற்சிகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாடசாலைகளில் செயலமர்வினை மேற்கொண்ட அங்கத்தவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக செயலமர்வினை திரு. சேரன் இனிதே நிறைவேற்றி வைத்தார்.

Photos