Difference between revisions of "Template:Suvadu Journal/Journal Guidelines"
m |
|||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
+ | [[File:Suvadu_Logo.jpg|right|300px]] | ||
<p align="center"><big>ஆய்வுக்கட்டுரை கையேட்டைத் '''[http://noolahamfoundation.org/wiki/index.php?title=File:NOOLAHAM_JOURNAL_%E2%80%93_Guide_for_Research_Paper_Submission_-_Version_1.1_%E2%80%93_10-01-2013.pdf தரவிறக்கவும்]'''.</big></p> | <p align="center"><big>ஆய்வுக்கட்டுரை கையேட்டைத் '''[http://noolahamfoundation.org/wiki/index.php?title=File:NOOLAHAM_JOURNAL_%E2%80%93_Guide_for_Research_Paper_Submission_-_Version_1.1_%E2%80%93_10-01-2013.pdf தரவிறக்கவும்]'''.</big></p> | ||
Line 178: | Line 179: | ||
தொழில் ஆகிய தகவல்களுடன் | தொழில் ஆகிய தகவல்களுடன் | ||
நிர்வாக ஆசிரியருக்கு | நிர்வாக ஆசிரியருக்கு | ||
− | </span> | + | </span>noolahamjournal@gmail.com<span |
− | |||
− | |||
lang=EN-US style='font-size:9.0pt;font-family:"Latha","sans-serif"; | lang=EN-US style='font-size:9.0pt;font-family:"Latha","sans-serif"; | ||
background:white'> எனும் மின்னஞ்சல் | background:white'> எனும் மின்னஞ்சல் |
Latest revision as of 10:53, 17 March 2014
ஆய்வுக்கட்டுரை கையேட்டைத் தரவிறக்கவும்.
இல. |
விடயம் |
1. |
ஆய்வுக்கட்டுரைகளுக்கான விதிமுறைகள் |
1.1 |
”நூலகம்” ஆய்விதழுக்காக அனுப்பப்படும் கட்டுரை இதற்கு முன்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வேறு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இக்கட்டுரை கட்டுரையாளரின் சொந்த ஆக்கம் என்றும் எழுத்து மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ கட்டுரையாளர் உறுதிப்படுத்தல் வேண்டும். |
1.2 |
கட்டுரையில் தமிழ் எழுத்துகள், தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் [Tamil Unicode Font] தட்டச்சிடப்பட்டு இருக்க வேண்டும். |
1.3 |
எழுத்துரு அளவு [Font size] 10 ஆக இருத்தல் வேண்டும். |
1.4 |
மொத்தக் கட்டுரையும் A4 அளவு தாளின் 10 பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். |
1.5 |
தட்டச்சிடப்பட்ட கட்டுரை “.odt”, “.doc” அல்லது “.docx” கோப்பு வடிவத்தில் இருத்தல் வேண்டும் |
1.6 |
தட்டச்சிடப்பட்ட கட்டுரை மின்னஞ்சலில் இணைக்கப்பட்டு கட்டுரையாளரின் முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், அஞ்சல்முகவரி, தொழில் ஆகிய தகவல்களுடன் நிர்வாக ஆசிரியருக்கு noolahamjournal@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக அனுப்பப்பட வேண்டும். |
1.7 |
”நூலகம்” ஆய்விதழில் பிரசுரிப்பதற்காக ஆசிரியர் குழுவால் வெளியிடுவதற்காக ஏற்கப்பட்ட கட்டுரையின் முழுக் காப்புரிமையும் நூலக நிறுவனத்துக்கு உரியது. நூலகம் ஆய்விதழானது Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported (CC-BY-SA 3.0) உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். அவ்வகையில் கட்டுரையாசிரியரோ வேறெவரோ கட்டுரையினைப் பயன்படுத்துவதாயின் அதே உரிமத்துடனேயே பயன்படுத்த வேண்டும். மேலதிக விபரங்களுக்கு http://creativecommons.org/licenses/by-sa/3.0/ இனைப் பார்வையிடுங்கள். வேறு உரிமங்களுடன் வெளியிட வேண்டுமாயின் நூலக நிறுவனத்திடம் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். வெளியிடுவதற்காக ஏற்கப்பட்ட கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. |
1.8 |
கட்டுரையின் தேர்வு மற்றும் வெளியீடு ஆகியவற்றில் ஆசிரியர்குழுவின் முடிவே இறுதியானது. |
2. |
நூலகம் ஆய்விதழின் விடயப்பரப்புகள் |
2.1 |
இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களிடையே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகக் கருதப்படும் பின்வரும் விடயப்பரப்புகள் : |
2.1.1 |
Religions and Cultural Memory – மதங்களும் பண்பாட்டு நினைவுகளும் |
2.1.2 |
Architecture and Design – கட்டடக்கலையும் வடிவமைப்பும் |
2.1.3 |
Science and Technology – அறிவியலும் தொழிநுட்பமும் |
2.1.4 |
Law and Society – சட்டமும் சமூகமும் |
2.1.5 |
Home and Life style – வீடும் வாழ்க்கைப் பாணியும் |
2.1.6 |
Arts and Activities – கலைகளும் செயற்பாடுகளும் |
2.1.7 |
Ethno Medicine – இனத்திற்குரிய மருத்துவம் |
2.1.8 |
Social Structure, Genealogy and Kinship – சமூகக்கட்டமைப்பு, உறவுசார் பதிவுகள் மற்றும் உறவு நிலைகள் |
2.1.9 |
Archaeology and History – தொல்லியலும் வரலாறும் |
2.1.10 |
Linguistics and Literature – மொழியியல் மற்றும் இலக்கியம் |
2.1.11 |
Ethnography and Race Relations – இனவரைபு மற்றும் இன உறவுமுறைகள் |
2.1.12 |
Villages and Communities – கிராமங்களும் சமூகக்குழுக்களும் |
2.1.13 |
Organizations and Institutions – அமைப்புகளும் கல்வி நிறுவகங்களும் |
2.1.14 |
Landscape, Environment and Biodiversity – நிலவடிவம், சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை |
2.2 |
ஆவணப்படுத்தல் சார் தொழினுட்பங்கள் , தகவல் அறிவியல், அறிவுப்பகிர்வு, நூலகவியல் சார்ந்த விடயப்பரப்புகள் |
3. |
நூலகம் ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரைகளை ஏற்கும் படிமுறையும் அதுசார்ந்த தகவல்களும் |
வெளியீட்டுக்காக நிர்வாக ஆசிரியரை வந்தடையும் அடையும் கட்டுரை, பின்வரும் படிமுறைகளினூடாக செலுத்தப்படும்: |
|
3.1 |
ஆய்வுக்கட்டுரை முதன்மை ஆசிரியருக்கு அனுப்பப்படும். |
3.2 |
ஆய்வுக்கட்டுரை அடையாளநீக்கம் செய்யப்பட்டு மூன்று பரிசீலனையாளர்களுக்கு அனுப்பப்படும். |
3.3 |
ஒவ்வொரு கட்டுரையும் கட்டுரையாளரின் தனிப்பட்ட தகவல்கள் அகற்றப்பட்டு மூன்று பரிசீலனையாளர்களிடம் தரப்பட்டு, அவர்களிடம் இருந்து பின்வரும் முடிவுகள் பெறப்படும் : |
3.3.1 |
திருத்தமின்றி ஏற்றல் |
3.3.2 |
திருத்தங்களை செய்ய வலியுறுத்தல் |
3.3.2.1 |
பரிசீலனையாளர் திருத்தங்களை அறிவிப்பின் அவை கட்டுரையாளருக்கு அறிவிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்ட வடிவம் பெறப்படும். குறித்த பரிசீலனையாளருக்கு மீண்டும் அனுப்பப்பட்டு அவருடைய ஒப்புதலின் பேரில் கட்டுரை ஏற்கப்படும். |
3.3.3 |
நிராகரித்தல் |
3.3.3.1 |
ஒவ்வொரு கட்டுரைக்கும் நியமிக்கப்படும் மூன்று பரிசீலனையாளர்களில் பெரும்பாலானோர் கட்டுரையை நிராகரிப்பின், அதன் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முதன்மை ஆசிரியருக்கு உண்டு. முதன்மை ஆசிரியர் விரும்பினால் அக்கட்டுரைக்கு வேறு பரிசீலனையாளர்களை நியமித்து பரிசீலனைச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்கலாம். |
3.4 |
ஏற்கப்பட்ட கட்டுரை ஆய்விதழில் வெளியிடப்படும். குறித்த ஆய்விதழில் வெளியிட இடம் இல்லை எனில், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படும் |
3.5 |
வெளியிடல், ஏற்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைத்தல், திருத்தம் செய்யக் கோரல், நிராகரித்தல் போன்ற செயற்பாடுகள் கட்டுரையாளருக்கு அறிவிக்கப்படும். |
4. |
மொழி ஊடகம் |
ஆய்வுக்கட்டுரை தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் அமைந்திருக்கலாம் எனினும், தமிழ் மொழியில் அமைந்திருத்தல் பெரிதும் விரும்பத்தக்கது. தேவைப்படுமிடத்து இரு மொழிகளும் பயன்படுத்தப்படலாம். |
|