Difference between revisions of "வாழ்க்கை வரலாறுகள் எழுதுவதற்கான வழிகாட்டி"
Line 39: | Line 39: | ||
* உசாத்துணை ஒவ்வொரு ஆளுமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்ட உசாத்துணை ஆவணங்கள் பற்றிய குறிப்புக்கள் வளங்கள் என்ற பகுதியில் வழங்கப்பட வேண்டும். | * உசாத்துணை ஒவ்வொரு ஆளுமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்ட உசாத்துணை ஆவணங்கள் பற்றிய குறிப்புக்கள் வளங்கள் என்ற பகுதியில் வழங்கப்பட வேண்டும். | ||
+ | |||
+ | == See Also == | ||
+ | * https://jwa.org/people/aaronsohn-sarah |
Latest revision as of 11:23, 30 July 2020
ஆவணம் வாழ்க்கை வரலாறுகள் அகராதி உள்ளடக்க பங்களிப்பாளர்களுக்கான வழிகாட்டி ஆகும். இந்த ஆவணம் Oxford DNB இன் Summary Notes for Contributors இனைப் பின்பற்றி அமைகிறது.
அறிமுகம்
நூலக வலைத்தளத்தின் ஆளுமைகள் பகுதியானது ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களின் ஆளுமைகள் தொடர்பான தகவல் வளங்களைத் தொகுக்கும் பகுதி ஆகும்.
உள்ளடக்கம்
இது பயனர் தேடிவரும் ஒவ்வொரு ஆளுமை தொடர்பாகவும் சிறு அறிமுகத்தினை வழங்குவதோடு குறித்த ஆளுமைகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட ஆவணங்கள் குறித்த பதிவுகளையும் கொண்டுள்ளது.
இது ஆளுமைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தரும் முயற்சி அல்ல. எல்லா ஆளுமைகள் பற்றியும் தம்மளவில் முழுமையான அறிமுகத்தினைத் தருவதோடு மேலதிக தேடலைச் சாத்தியப்படுத்தும் உசாத்துணைக் குறிப்புக்களையும் கொண்டுள்ளது.
அதாவது ஒரு கலைக்களஞ்சிய அகரமுதலியாகவே இது அமைகிறது. எதிர்காலத்தில் விரிவான கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதற்கான முதற்படியாக இதனைக் கொள்ளலாம்.
தெரிவுமுறை
எந்த எந்த ஆளுமைகளை உள்ளடக்குவது என்பது தொடர்பில் ஆளுமைகளின் முக்கியத்துவம் சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லை. ஏதாவது ஒரு நூலில் அல்லது இதழில் குறித்த ஆளுமை பற்றிய குறிப்பு வெளிவந்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி ஆகும். குறித்த ஆளுமை தொடர்பான நினைவு மலர் (கல்வெட்டு) அதில் உள்ளடங்காது.
இலங்கைத் தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்த அல்லது இலங்கைத் தமிழ்ச் சமூகங்களுக்காகப் பணியாற்றிய ஆளுமைகளின் விபரங்கள் திரட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக:
- எழுத்தாளர்கள, கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்
- பேராசிரியர்கள், அதிபர்கள்
- சமயத் தலைவர்கள், சமயப் பெரியார்கள், சித்தர்கள்
- சமூக சேவகர்கள், புரவலர்கள்
- அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள்
தகவல் சேகரிப்பு
நம்பகமான உசாத்துணை வளங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். அச்சிடப்பட்ட ஆவணங்கள், விக்கிப்பீடியா போன்ற ஓரளவு நம்பகமான வலைத்தளங்கள் பயன்படுத்தப்படலாம். நேரடித் தொடர்புகள் மூலமும் பெறப்படலாம். அவ்வாறு பெறும்போது யாரால் யாரிடமிருந்து என்ன தகவல்கள் பெறப்பட்ட என்ற தகவல்கள் உசாத்துணைப் பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும்.
தகவல் இணைப்பு
ஒருவரது பங்களிப்புத் தொடர்பான முழுமையான சித்திரத்தினை ஒவ்வொரு கட்டுரையும் வழங்க வேண்டும். ஆளுமை பற்றிய குறிப்புக்கள் பொதுவாக மூன்று பந்திகளில் அமையும். ஓர் ஆளுமையின் பங்களிப்புக்கள் குறைவாக இருப்பின் ஒரு பந்தியிலேயே குறிப்புக்கள் முடிவடையும். ஓரளவு பங்களித்தோர் பற்றிய விபரங்கள் அறிமுகம், பங்களிப்பு ஆகிய இரு பந்திகளில் அமையலாம். மிக முக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புக்கள் மூன்று பந்திகளைத் தாண்டலாம். ஆயினும் மூன்று பந்திகள் விரும்பத்தக்கது.
- முதற்பந்தி: பெயர், பிறப்பு-இறப்பு விபரங்கள், ஊர், பெற்றோர், கல்வி, தொழில் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும்.
- இரண்டாவது பந்தி அவரது பங்களிப்புக்கள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். மூன்றாவது பந்தி அவரது பங்களிப்புக்கள்,* வெளியிட்ட நூல்கள், பெற்ற பட்டங்கள் போன்றவை உள்ளிட்ட மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும்.
- ஆளுமைகள் பற்றிய போதிய தகவல்கள் இல்லை என்றாலும் ஒன்று அல்லது இரண்டு பந்திகளுக்குள் கட்டுரை அமையலாம். ஆனால் முடிந்தவரை தேடித் தகவல்களை இணைக்க வேண்டும்.
- இவற்றையும் பார்க்கவும் பகுதி: நூலகத்தில் குறித்த ஆளுமையின் நூல்கள் இருப்பின் குறித்த பகுப்பிற்கான இணைபு
- வெளி இணைப்புக்கள்: குறித்த ஆளுமை தொடர்பான வலைப்பக்கங்களுக்கான இணைப்புக்கள் வெளி இணைப்புக்களாக வழங்கப்பட வேண்டும். நம்பகமான, தரமான பக்கங்களுக்கே இணைப்பு வழங்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா இணைப்புக்கள் விரும்பப்படுகின்றன.
- உசாத்துணை ஒவ்வொரு ஆளுமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்ட உசாத்துணை ஆவணங்கள் பற்றிய குறிப்புக்கள் வளங்கள் என்ற பகுதியில் வழங்கப்பட வேண்டும்.