Feedback/4
Earliar Feedbacks | Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12
இது ஒரு வியக்க தக்க முன்னெடுப்பு.சின்ன சின்ன விடயங்களாக நீங்கள் நிறைய செய்வது எனக்கு ஆச்சரியமூட்டுகிறது.தமிழ் மக்களைக் கவனத்தில் கொண்டு இப்படி ஒரு ஆக்கபூர்வமான வேலையை நூலகம் செய்கிறது, இது மேலும் தொடர வேண்டும்.
Dr. நந்தா நந்தகுமார்
05/09/2013
நூலகம்.கொம் இன் சேவை அளப்பரியது. அனைத்துல தமிழ் மக்கள் இதன் சேவையைப் பெரிதும் போற்றுவது நான் அறிந்த உண்மை. என்னால் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் சேவைகளையும் அளிக்க காத்திருக்கிறேன்.
B.S. சர்மா
27/09/2013
இனிமையான சந்திப்பும் ஆரோக்கியமான ஆரம்பமும். வாழ்த்துக்கள்
திலகராஜா மயில்வாகனம் (மல்லியப்புசந்தி திலகர்)
28/09/2013
மிக மிக அவசியமானதும் தேவையானதுமான சேவை நூலகத்தினுடையது.வாழ்த்துக்கள்
தெளிவத்தை ஜோசப்
28/09/2013
மிகவும் பயன் நிறைந்த முயற்சி. வாழ்த்துக்கள்.
லுணுகல ஸ்ரீ
28/09/2013
மிகவும் பயனனுள்ள செயற்பாடு. எங்களுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் மிகவும் பயன்படும்.வாழ்த்துக்கள்.
பாரதிமோகன் கந்தசாமி (மீரா பாரதி)
01/11/2013
இன்றைய இணையத்தள இளைய சமூகம் வாசிப்பு என்பதையும் அங்குதான் நிகழ்த்துகிறது. இந்த நிகழ்த்தல்தான் எங்களுடைய அறிவுசார் உலகை உருவாக்கப் போகின்றது. தேடல்களை, கிடைக்கின்ற எல்லா யன்னல்களிற்கூடாகவும் நிகழ்த்த வேண்டும் என்பது எனது கருத்து. இப்போது பெரும்பாலான சிறுவர்களும் இளையவர்களும் பார்வையைச் செலுத்துகின்ற மிக முக்கியமான யன்னல் ஒன்றை நூலக நிறுவனம் திறந்திருக்கிறது. இந்த ஒன்றை யன்னலுக்கூடாக எங்கள் கடந்த நாட்கள் தெரிகிறது. இதில் இருந்து தான் தொடங்குகிறது நாளைகளுக்கான பாதை. காலத்தோடு செல்கின்ற உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
சடாகோபன்
19/12/2013
இன்று முதன் முதலாக நூலக நிறுவன அலுவலகத்திற்கு வந்தேன். இதுவரைக்கும் நூலகத்திற்கும் எனக்குமான உறவு இணையத்தினூடாகவே இருந்தது. நூலக வலைத்தளத்திற்கு பின்னால் எத்தகைய செயற்பாடுகள் நடக்கின்றது என்பதை ஓரளவு காணக்கூடியதாக இருந்தது. சுறு சுறுப்பாகவும், முழு ஈடுபாட்டுடனும் ஆவணப்படுத்தலில் அதீத ஆர்வம் காட்டிய தொண்டர்கள், ஊழியர்கள் இவர்களுடன் உரையாடியதில் எனக்கும் நிறைய விடயங்கள் பற்றி ஆழமான தேடுதல் தூண்டப்பட்டது.
க. ஞானதாஸ்
27/12/2013
பார்த்தேன் வியந்தேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
இரத்தினம் நித்தியானந்தம்
இரத்தினம் அமைப்பு
02/01/2014