Feedback/10
Earliar Feedbacks | Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 | Archive 13 | Archive 14
வாழ்வின் அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் அருமையான முயற்சி. சிறு தேடல்கள் பெரும் ஆவணங்களாக வெளிவந்துள்ளது.அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆளணியினருக்கு பாராட்டுக்கள்.தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் செயற்பாடுங்கள். வளர வாழ்த்துக்கள்.
வே. தபேந்திரன்,
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
மரபபுரிமைகளைத்தேடி என்ற கருப்பொருளில் நூலகம் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கண்காட்சி சிறப்பானது. இது நமது வேர்களை வாழ்வியல்களை, பண்பாட்டை, கலாசாரத்தை நாம் மீட்டிப்பார்க்கவும் அறிந்து கொள்ளவும் தூண்டுகிற ஓர் செயற்பாடு.அத்துடன் வரலாற்றை ஆவணப்படுத்தவும் எம்மிடம் உள்ள ஆவணங்களை கடத்தினால் அழியாத வண்ணம் மற்றவர்கள் அறியவும், நாம் முன்வர வேண்டும் என்பதை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தும் என்பது மறக்க முடியாது. நன்றி நூலகம்.
குறிப்பு - எமது நிறுவனத்தின் பல ஆவணங்களை எண்ணிமப்படுத்த வேண்டியுள்ளது.அது தொடர்பில் உரிய நடைமுறைகளை எமது நிறுவனம் சார்ந்து முன்னெடுக்க தயாராக உள்ளோம். அதனை நடைமுறை படுத்துவது தொடர்பில் நூலக நிறுவனத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றேன். எனது தொடர்பு விபரங்கள் கீழே வழங்கியுள்ளேன்."
ந. சிவரூபன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
நூற்றாண்டின் பழமையான ஆவணங்களைத் தேடி காட்சிப்படுத்தியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் கண்காட்சி தொடர்பான வெளிப்படுத்தல் போதாமல் காணப்படுவதால் அனேகமானோர் இங்கு வந்து கற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. வருங்காலங்களில் கண்காட்சி தொடர்பில் போதிய விளம்பரங்களை வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
எஸ். கெளசிகன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழர் பிரதேசங்களில் நடைமுறையில் இருந்த பெறுமதி மிக்க ஆவணங்கள் சமூகத்தினருக்கு பிரயோசனம் உள்ள பல்வேறு விடயங்கள் தொலைந்து போகாமல் நூலக நிறுவனம் பேணுகிறது.தமிழர்களின் பெரும் பொக்கிசம்.
பி. சண்முகநாதன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
தங்களது முயற்சியின் வெளிப்பாடு வெற்றியின் ஆரம்பம்.
க.சிவம்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
சிறந்த பணி. வாழ்த்துக்கள்.
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள்.
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
மிகச்சிறந்த காலத்தின் தேவை. இதற்காக உழைக்கும் அத்துணை உள்ளங்களிற்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
ப. நந்தகுமார்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
இயற்கையால், செயற்கையால் ஏற்படும் அழிவுகளைத்தாக்குப்பிடிக்க இன்னும் பல நூற்றாண்டுகள் எமது மரபுரிமைகள் பாதுகாக்கப்பட பணியாற்றும் நூலக நிறுவனத்திற்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும். நன்றி.
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
பல ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்களால் எழுதப்பட்ட நூல்களை மிகவும் பக்குவமாக பாதுகாத்து வருங்கால சந்ததியினர்கள் பயனடையச் செய்துள்ளது.
வை. கிசால்வன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி