Feedback
உங்கள் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறேன். எவருமே நினைக்காத அல்லது நினைத்தும்
அவர்களால் முடியாத ஒரு மகோன்னதமான திட்டத்தை நீங்கள் செயற்படுத்துகிறீர்கள் எனும் போது
உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கருத்தினை அளிப்பது இது முதல் தடவைதானேயொழிய
நூலகத்தினை ஆரம்பித்த நாட்களில் இருந்து இதற்குள் நீந்தி விளையாடுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி.
- விசாகன்
(http:// Kidukuveil.blogspot.com)
நீண்ட நாட்களாகவே இத்தளத்தைத் தொடர்ந்து பார்த்துப் பயன்பெற்ற வருகிறேன். மிகவும்
பயனுடையதாகவுள்ளது. எதிர்கால சிந்தனையைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மிக்க மகிழ்ச்சி!!!!!
- முனைவர். இரா. குணசீலன்
(http://gunathamizh.blogspot.com)
வணக்கம். நூலகம் கண்டேன் மிகப் பயனுள்ள மின்தொகுப்புகள் .. உங்கள் பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
-கல்பனா சேக்கிழார்
(http: //www.sekalpana.com)
நல்ல முயற்சி தமிழுலகிற்கு ஒரு தரமான பணி. மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- அருள்ஜோதிச்சந்திரன்
நூலகத்தில் அனைத்துப் பகுதியும் அற்புதம்.. தேவையின் கட்டாயம். மாணவர்களின் நன்மை கருதி
நிறையப் பாடப் புத்தங்களை வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
-கண்ணன்
மிகச்சிறப்பான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளீர்கள் ... எனது ஆக்கங்களும் நாவல்களும் உங்கள் தளத்தை அலங்கரிக்கும் என தாங்கள் எண்ணும் பட்சத்தில் எனது பங்களிப்பு தொடர்ச்சியாக தங்களிடம் வந்து சேரும்.. நன்றிகள். இத்தாலியில் இருந்து,
-அருகன் (பிரான்சிஸ் மக்ஸிமிம்)
(http://arugan.spaces.live.com)
நூலகம்.கொம் செய்யும் பணி இன்றைய காலகட்டத்தில் அவசியமான பணி இந்தப் பணியை இன்றைய
இளைஞர்கள் முன்னின்று செய்வது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. அவர்களின்
அர்ப்பணிப்பான இந்த ஆவணப்பதிவானது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் பணியை வாழ்த்தி வணங்குகிறேன்.
-மு.கதிர்காமநாதன்
முற்று முழுதாக இளைஞர்களால் நூலகம்.கொம் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. அம்முயற்சிக்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாமும் எம்மாலான உதவிகள் புரிந்து வருகிறோம் என்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் முயற்சி கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும்
பயன் தராது உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் பயன்பட்டு வருவது
உவகை தரும் செய்தியாகும் . தங்கள் பணிகள் மென்மேலும் சிறப்புற்று, உலகெங்கும் வாழும் தமிழ்
பேசும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென மனமார வாழ்த்துகிறோம்.
-ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன்
அழிவுக்கு உட்பட்டிருக்கும் ஓர் இனத்தின் தடயங்களை தளராது ஆவணப்படுத்தும் உள்ள பணி
சிறப்புற வாழ்த்துக்கள்.
-செ.திருச்செல்வன்
சிறு தியாகம் செய்தால் சிறிதளவு வெற்றியை பெறமுடியும் பாரிய தியாகம் செய்யும் இடத்து பாரிய
வெற்றியை அடைய முடியும் அதற்கமைய கலை, கலாச்சாரம் இனத்தின் தொன்மையை தொலைத்த
எமது தமிழ் இனத்தின் பதிவுகளை பல தியாகங்கள் மூலம் பேண வேண்டிய கடமையை செய்யும்
இளைஞர்களுக்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள்.
-சி.பாஸ்க்கரா