Tamil Documentation Conference 2013/Call for Papers
Jump to navigation
Jump to search
முகப்பு Main Page |
அறிமுகம் Introduction |
கட்டுரைகளுக்கான அழைப்பு Call for Papers |
பங்கேற்க To Participate |
நிகழ்வுகள் Programs |
ஆய்வுக் கட்டுரைக்கோவை Proceedings of Tamil Documentation Conference 2013 |
பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.
ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்
- வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
- ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
- தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
- சமூகத்தை ஆவணப்படுத்தல்
- மொழி இலக்கியப் பதிவுகள்
- அறிவுப்பகிர்வும் கல்வியும்
- ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
- எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
- நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
- கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்