Template:Suvadu Journal/Introduction

From Noolaham Foundation
Revision as of 06:46, 16 March 2014 by Gopi (talk | contribs)
Jump to navigation Jump to search
Suvadu Logo.jpg

இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தி பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், தனது ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2014ம் ஆண்டிலிருந்து ”சுவடு” எனும் ஆய்விதழை அரையாண்டிற்கு ஒருமுறை வெளியிடவுள்ளது.

தமிழ்ச்சமூகங்கள் தொடர்பான கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்தலையும் அவற்றை விரைவாக்கலையும் செய்யவிருக்கின்ற “சுவடு” ஆய்விதழானது, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை சீரிய முறையில் பரிசீலித்து வெளியிடலை தனது பிரதான செயற்பாடாகக் கருதுகின்றது. மேலும், இந்த ஆய்விதழானது, நூலக நிறுவனம் இது வரை செய்து வந்த ஆவணப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டக்கூடியதாகவும், தமிழ் சமூகங்கள் சார்ந்த ஆவணங்கள் குறித்த அறிவுசார் உரையாடலை வளர்ப்பதற்கான களமாகவும் அமையும்.

இவ்விதழ் ஆண்டுக்கு இருதடவை வெளியாகும்.