News/2017/2017.07.

From Noolaham Foundation
Jump to navigation Jump to search

ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் அவர்கள் ஒரு முன்னோடி தமிழ் ஆவணகக் காப்பகர் (Archivist) ஆவார். இவர் ஈழத்து வரலாற்று, அரசியல், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்த ஒரு பெரும் சேகரிப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாகா முன்னின்று முன்னெடுத்தார். ஆவணம், ஆவணப்படுத்தல், ஆவணகம் பற்றி போதிய விழிப்புணர்வு தமிழ்ச் சூழலில் இல்லாத ஒரு காலத்தில் இவர் இப் பணியை முன்னெடுத்து இருந்தார். மேலும், இவர் உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அங்கு போய் தகவல் சேகரித்தார், அவர்களைப் பற்றி நூற்களை வெளியிட்டார். இந்தச் சேகரிப்புகள் அடங்கிய ஆவணகமாக உலகத் தமிழர் ஆவணக் காப்பகத்தை தொடங்கினார். மேலும், இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவம் ஆவார். இவரது ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு கனடாவில் சனிக்கிழமை யூலை 8, 2017 அன்று ஸ்காபுரோ நகர மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பாக அருள்மொழிவர்மனும் நற்கீரனும் "பண்பாட்டு மரபுரிமைகளை ஆவணப்படுத்தல்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்தல் (presentation) வழங்கினார்கள்