Talk:Skype Meeting Minutes (2011 May 28)

From Noolaham Foundation
Jump to navigation Jump to search

Business Model

  • Operations
  • Human Resources
  • Sales
  • Marketing
  • Accounting
  • Management

NGO Model

Key Roles

  • Clients
  • Board
  • Board Chair: "A board chair's role is central to coordinating the work of the board, executive directo and committees. The chair's role may have appointive power for committees, depending on what is specified about this role in the bylaws. The power of the board chair is usually through persuasion and general leadership. See the topic Board Chair for an overview of the board chair role."
  • Committees
  • Executive Director: "The board typically chooses to have this one person who is ultimately responsible to carry out the wishes of the board. The executive director is directly accountable for the work of the staff and supports the work of the board committees."
  • Staff
  • Volunteers

Areas of Knowledge and Skills that are Generally Unique to Nonprofits

  • Fundraising and Grantwriting
  • Governance (Volunteer Board of Directors)
  • Nonprofit Budgeting and Accounting
  • Program Development and Evaluation
  • Public Policy
  • Volunteer Programs

Shaseevans Comments 1

அதாவது, 'நூலகத்தை நிறுவனமயமாக்கல்' என்ற விடயத்தின் கீழ் இன்றிருக்கூம் சகல விடயங்களையும் பேசி முடித்து விடுவது நல்லது என்பதே எனது கருத்தாகும். 1. சுமுகமான உரையாடலுக்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்காக முதலாவது சந்திப்பு நடைபெற்றது. 2. நூலகத்தின் முக்கிய செயற்பாடுகளை இனங்காண்பதற்கும் பிரச்சனைகளைக் கண்டடைவதற்கும் நடைபெற்றது.

இரண்டு தடவைகளும் பலவிடயங்கள் உரையாடப்பட்டன. ஆரோக்கியமான உரையாடலாக அமைந்தன. அதேநேரம், இனிமேலான சந்திப்புக்கள் இன்னும் இறுக்கமாக வரையறுக்கப்பட்டு உரையாடல் முடிவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவை தொடர்ச்சியாகப் பெறுமதியுடையவையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆக, கடந்த உரையாடல்களில் அமைந்த விடயங்களில் முக்கியமானவையாக..

செயற்பாட்டு வரைபடம் http://tinyurl.com/3wtt6d6

அடுத்ததாக நாம் 'நிறுவனமயப்படுத்தல்' தொடர்பாக உரையாடிவிட்டு அவற்றின் ஒவ்வொரு விடயங்களையும் அணுகலாம் என்று நினைக்கின்றேன். அது அதிகம் வசதியானது.

மாதாந்த அறிக்கைகளை மையமாகக் கொண்ட ஒழுங்குமுறமை http://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Internal_Wiki

Institutionalization என்ற விடயம் தொடர்பாக நாம் சகல விடயங்களையும் உரையாடிவிட்டுச் செல்வது நல்லது என்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் எமது தொடர்ச்சியான உரையாடல்களுக்கு அதுவே அத்திவாரம் இடும் விடயம். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ள விடயங்களை முறைப்படுத்துவது தொடர்பாக நாம் மேன்மேலும் யோசிக்க வேண்டும். உரையாட வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக நாம் Regional Noolaham, Global Noolaham, Noolaham Projects, Research Institute, Collaboration, Outreach, Fund raising, Noolaham Digital Library, Technology, Library Science, Publications, Finance ஆகிய 12 விடயங்களை ஒவ்வொன்றாக அணுக வேண்டும். ஒவ்வொரு விடயங்கள் சார்ந்தும் முடிவுகள் எடுக்கபப்ட்டு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது அவதானிக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகும் பட்சத்திலேயே எமது உரையாடல்கள் பெறுமதியுடையவையாகும்.

தன்னார்வலர்களாலேயே தற்போதிய செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னார்வல இயக்கமே நூலகத்தை முற்றுமுழுதாக இயக்குகின்றது. ஆக, தன்னார்வலர்களுக்கிடையில் சரியான புரிந்துணர்வுடன் கூடிய ஒழுங்குமுறையொன்று அவசியமானது. அதைச் சாத்தியப்படாதவிடத்து நாம் பேண்தகு நிலையை உருவாக்க முடியாது. திக்கொன்று திசையொன்றாகச் செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

ஆக, அடுத்த சந்திப்பில் இவ்விடயம் சார்ந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக, நிறுவனங்களில் முகாமைத்துவம் செய்யும் நிலையில் உள்ளவர்களை இணைப்பதும் அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் மிக அவசியமானதாகக் கருதுகின்றேன். சரியான பொறிமுறையைக் கண்டடைவதே எமக்கு அவசியமானது. அதற்கான ஒழுங்குமுறைக்குள் நாம் வர வேண்டும்.

Shaseevans Comments 2

தற்போதுள்ள கட்டமைப்பு முறை 6 ஆண்டுகால வளர்ச்சியின்பாலானது. அக்கட்டமைப்பை ஒரேயடியாக நிராகரித்துவிட்டு புதிய கட்டமைப்பைத் தோற்றுவிப்பது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. மிகவும் இறுகிப் போன கட்டமைப்பாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆக, அதன் இறுக்கத்தை இளக்கி நகர்த்துவதே சரியான வழிமுறையாக இருக்க முடியும்.

தற்போதுள்ள செயற்படு பரப்பானது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 12 பகுதிகளும் சசீவன் மற்றும் கோபி ஆகியோரது கண்காணிப்பிற்குள் உள்ளன. ஒருவரது செயற்பாடு, விருப்பம் அனுபவம் ஆகியவை சார்ந்து அவர் மேல் விழுந்த பொறுப்புக்களாகும். இக்கட்டமைப்பிற்கு வெளியே 'நூலக நிறுவன கண்காணிப்புப் பொறிமுறை' ஒன்று நிறுவப்பட்டு, நூலகத்தின் ஒவ்வொரு நகர்வும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு அவை விமர்சிக்கப்பட வேண்டும். தவறுகளை அவ்விடயங்களில் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு பகுப்பாய்ந்து அவை தீர்க்கப்பட வேண்டும். அவற்றுக்குச் சரியான பொறிமுறை அவசியமானது.

பத்மநாப ஐயர், நற்கீரன் ஆகியோர் உள்ளடங்கியதாக - இயலுமானவரையில் ஆலோசனைக்குழுவினரையும் உள்வாங்கி இன்னும் பிற சமூக நலன் சார்ந்த விடயங்களில் ஆர்வமுள்ளோர் - செயற்படுவோர் உள்ளடங்கியதாக முகாமைத்துவம் தொடர்பில் அனுபவமுள்ளவர்களையும் இணைத்து இக்காண்காணிப்புப் பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டியது மிக அவசியமானதாகக் கருதுகின்றேன்.

நிறுவனமயப்படுத்தல் தொடர்பில் இயங்குவதற்கான சகல அதிகாரமும் உள்ளவர்களாக உள்ள அக்குழுவிற்கு விமர்சனத்திற்கு உட்படுத்தும் சகல அதிகாரங்களையும் கொடுப்பதோடு - மந்தகதியில் உள்ள செயற்பாடுகள், தீர்க்கப்படாத பிரச்சனைகளை கையகப்படுத்திச் செயற்படுத்தும் அதிகாரமும் கொடுக்கப்பட வேண்டும். காலப்போக்கில் இன்றைய கட்டமைப்பைபில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன்.