Feedback/18
Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 |Archive 13 | Archive 14 | Archive 15 | Archive 16 | Archive 17 | Archive 18
Very Inspiring thought process and inspiring team. All the best
"Shushanthy Gobalakrishnan" - F183
22.10.2024
நூலகத்தை பார்வையிடல்
Very inspiring thought process & inspiring team! All the best
"Selliah Manoranjan" - F185
28.10.2024
நூலகத்தை பார்வையிடல்
Visited noolaham.org today. Very usefull effort and work for all tamil community. It gives lot of satisfaction for all the writers like me. It's easy to access any book at any time when we need it for read it and referal. May god bless you for your future also.
"Kohila Mahendran" - F186
01.11.2024
நூலகத்தை பார்வையிடல்
தமிழ் இலக்கியத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் சுவடிகளின் பல நூற்றாண்டுகளின் தொலைந்த அந்த ஆவணப்படுத்தல்களை காணக்கிடைத்து. மிக ஆச்சரியமாக இருந்தது. எனவே தங்களது உழைப்பிற்கும் உயர்விற்கும் எனது வாழ்த்துக்கள். உங்களது பணி தொடர எனது வாழ்த்துக்கள். உங்களது கருத்துக்களை எதிர்காலத்தில் ஒலி, ஒளிகளால் பதிவு செய்து தங்களது இணையப்பக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றிகள்.
"CM. Abdul Rahman (DO)" - F188
01.11.2024
ஏறாவூர் கண்காட்சி
ஏறாவூர் புத்தக கொண்டாட்டத்தில் நூலக நிறுவனத்தினால் பல்வேறு ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டது. என்னுடைய வாழ்வில் இவ்வளவு காலமும் ஓலைச்சுவடிகளை புகைப்படங்களில் தான் பார்த்து இருக்கிறேன். முதல் தடவை நேரில் பார்க்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஓலைச்சுவடிகள் தொகுக்கப்பட்ட காலங்களை குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
"இஹ்திஸாம் மற்றும் பாதிர்" - F189
01.11.2024
ஏறாவூர் கண்காட்சி
சிதைவடைந்து போகும் ஆவணங்களை கணனிமயப்படுத்தி எதிர்கால சந்ததிக்கு கடத்தும் உங்கள் பெறுமதியான வேலைத்திட்டத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். நானும் தங்களின் இணையத்தினூடாக கல்விப்புலம் சார்ந்த அதிகளவிலான தகவல்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறேன்.
"AJ. Raati (To)" - F190
02.11.2024
ஏறாவூர் கண்காட்சி
கடந்த 10 வருடங்களாக நூலக நிறுவனத்தினை நான் பயன்படுத்தி வருகிறேன். அந்த வகையில் எனது வாசிப்பு வளர்ச்சியில் நூலக நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது. அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியாத பல ஆவணங்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் உசாத்துணைப்பகுதியின் மூலம் ஆய்வாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அருமை. மென்மேலும் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
"Sarjun Jamalldeen" - F191
02.11.2024
ஏறாவூர் கண்காட்சி
இக்கண்காட்சியில் நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்படுகின்ற ஓலைச்சுவடிகள் மற்றும் அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வேலைப்பாடுகள் அனைத்தும் அறியக்கூடியதாக இருந்தது. உண்மையில் நூலக நிறுவனம் தொடர்பாக கூறப்பட்ட அறிமுகத்தினூடாக இந்நிறுவனம் மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களானது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இங்கு பணியாற்றுகின்ற பணியாட்கள் மிகவும் கன்னியத்துடனும் நேர்த்தியான வகையிலும் நிறுவனம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை மேற்கொண்டனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் நூலக நிறுவனம் மென்மேலும் பல்வேறு ஆவணங்களை ஆவணப்படுத்தும் பணி தொடர வேண்டும்.
"N. Jeyaraj" - F192
02.11.2024
ஏறாவூர் கண்காட்சி
தற்கால சமூகத்தில் மிகவும் அவசியமானதும் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டியதுமான பல விடயங்கள் காணப்படுகின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். மேலும் இவர்களது இப்பணி மற்றும் சேவை தொடர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
"M.M. Mufas" - F193
02.11.2024
ஏறாவூர் கண்காட்சி
Very impressive. The credit goes to Noolaham Management. Well organizaed all staff have full understanding of their works and process. We will continue our support further.
"Mr & Mrs Bavaharan" - F194
04.11.2024
நூலகத்தை பார்வையிடல்