Feedback/2
Archive 1 | Archive 2 | Archive 3 | Archive 4 | Archive 5 | Archive 6 | Archive 7 | Archive 8 | Archive 9 | Archive 10 | Archive 11 | Archive 12 |Archive 13 | Archive 14 | Archive 15 | Archive 16 | Archive 17 | Archive 18
நூலகம் திட்டம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றை வரை ஆனது செயற்பாடுகள் ஈழத்தின்
எழுத்து வகை ஆவணப்படுத்தல் மட்டுமல்லாது, ஈழத்தின் எழுத்து வகை ஆவணப்படுத்தல்
மட்டுமல்லாது ஈழத்தின் பண்பாட்டு வழக்காற்றலியல் சார்ந்தும் நீடித்த பாவனையை எதிர்காலச்
சந்ததியினருக்கு விட்டுத்தந்திருக்கின்றது.
தொடர்ந்தும் இவை பேணப்பட ஒலி வடிவ நூல்கள் தரவேற்றல் இன்ன பிற ஈழத்து
பண்பாட்டில் சார்ந்த ஆவணங்களையும் இணைத்துக் கொள்ளல் போன்ற ஆரம்ப கால
உருவாக்குனர்களின் கனவையும் மெய்ப்படுத்த வேண்டும். இதற்கான என்னாலான உதவிகளுடன்
மனமார்ந்த வாழ்த்துக்கள் குழுவினர்களுக்கு.
நிலா.லோகநாதன்
5/06/2011
தங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த பணிகளாகின்றன.
பணிகள் தொடரவும் வளம் பெறவும் மேலெழுந்து சிறக்கவும் நல்வாழ்த்துக்கள்.
சபாஜெயராசா
5/06/2011
ஈழத்துத் தமிழர் சார்ந்த மிகவும் அவசியமான பணியினை, ஈழத்துத் தமிழ் சொத்துக்களை
எண்ணிமப்படுத்தும் பணியினை, மேற்கொள்ளும் நூலகம்.கொம் (noolaham foundation)
முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
க.குமரன்
(குமரன் புத்தக இல்லம்)
5/6/2011
'பனையோலை' என்ற இந்த முயற்சி மிகவும் முக்கியமான காலப்பகுதியில் இலங்கையில்
இளைஞர்/ யுவதிகளால் ஆராம்பிக்கப்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை வரலாற்றில்
ஆவணப்படுத்தல் என்னும் செயற்பாடு முக்கியமானதொரு இடத்தை என்றும் இல்லாதது போல்
பெற்றிருக்கின்றது இதனை சரியாகப் புரிந்து கொண்டு இக்கால இளைஞர்/யுவதிகள் தங்களது
வாழ்க்கைச் செயற்பாடுகளுடன் மட்டும் முடங்கிவிடாது சமூக மாற்றத்திற்காக செயற்படுவதை
மிகவும் வரவேற்கின்றேன். கிடைத்த சந்தர்ப்பங்களை சரியான மற்றும் அதி திறனுடன் பயன்படுத்தி
உங்களது இந்த முயற்சி மேலும் பல பனையோலைகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.
காயத்ரி
02/10/2011
வலைத்தளத்தில் நூலகம் நிறுவனம் செய்து வரும் எழுத்தாளர் பற்றியதும் வெளியீடுகள் நூல்கள்,
பருவ இதழ்கள், கட்டுரைகள் வேறு பல ஆக்கங்கள் பற்றியவையுமான பதிவுகள் சிறந்த
உசாத்துணைக்கானதும் ஆய்வுகளுக்குமானதுமான பெரும் சேவையாகும். தமிழ் எழுத்தாளர்கள்
அனைவரையும் எது வித பேதமுமில்லாது மதித்து வரவேற்று உள்வாங்கி உற்சாகப்படுத்தும்
இச்சேவை எந்த இடையூறும் இல்லாது தொடர என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆயத்தமாயுள்ளேன்.
எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்.
தாஸிம் அகமது,
கொழும்பு 2
Excellent Contribution to the Tamil language and literature.
Prof. Saba Jayarasah
நூலகம் நிறுவனம் 10000 நூலகளை எண்ணிமப்படுத்தி சாதித்ததை இதைய பூர்வமாக வாழ்த்தி
இளைஞர்களின் பங்களிப்பை பார்த்து வியக்கின்றேன்.
முகுதந் காளிதாஸ்
25/02/2012
நூதனமான வாழ்கையில் ஒரு நூலகம் தேவை தான் என்பதை உறுதிப்படுத்துவோம்.
எஸ்.குகவரதன்
முற்று முழுதாக தன்னார்வ இளைஞர்களால் நடாத்தப்படும் இந்நிகழ்வில் பங்கு பற்றி
அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் பொன்னான வாய்ப்பு. இளம் பருவத்தினர்
இவ்வாறான சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவது எமது வருங்கால சந்ததியினரது ஆளுமையில்
எமக்கு நம்பிக்கைபூட்டுவதாய் அமைகின்றது. இந்த செயற்பாடுகள் தலைமுறை தலைமுறையாய்
கொண்டு நடத்தப்பட்டு வரும் தலைமுறைகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரார்த்திக்கொண்டு வாழ்த்துகிறோம்.
சி.சாருதன்
மொறட்டுவை பல்கலைழக மாணவன்
யாழ்ப்பாணத்தில் இணைப்பாளர் என்றவகையில் எனது கருத்துக்களைப் பதிவதில் மிகுந்த
மகிழ்ச்சியடைகின்றேன். எமது இணைய எண்ணிம நூலகத்தினால் பயன் பெறுவோரின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது. எது வித லாப
நோக்கமும் அற்று சேவையொன்றையே உண்மை இலக்காக கொண்டு செயற்படும் எண்ணிம
நூலகத்தின் பங்காளி என்றவகையில் மிகவும் மகிழ்வடைக்கின்றேன். இந்தப் பணி மென்மேலும்
மேன்மையுறுவதற்கு என்றும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன்.
கு.கௌதமன்
உளவியல் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்
[Category:All Pages]]