Feedback/14

From Noolaham Foundation
Jump to navigation Jump to search


Noolaham.com இணையத்தளத்தை பல தடவை பார்த்து பயன்படுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த பணி.

K. Sivarajah - F133
08/03/2022
நூலகத்தை பார்வையிடல்



நூலக அமைப்பினூடாக பல்வகையான ஏடுகள், புத்தகங்கள், பல்வகை ஆக்கங்களை பதிவேற்றம் செய்யும் நடைமுறையில் எனது 22 ஏடுகள், 90 பல்வகை ஆக்கங்கள், 07 நூல்கள்களை பதிவேற்றம் செய்து, எமது சமுதாய மக்கள் பயனடையும் முறையில் அளப்பரிய சேவையாற்றி வரும் நூலக நிறுவனத்தினருக்கும், அன்பாகப் பண்பாக வரவேற்று கடமை புரியும் சேவகர்களுக்கும் எனது அகம் கனிந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூ. அருளம்பலம் - F134
18.07.2022
நூலகத்தை பார்வையிடல்



நூலக நிறுவனத்தின் வாராந்த கலந்துரையாடலை நான் வரவேற்கின்றேன். நல்ல கருத்து மலையக மக்கள் தகவல் நாகரீக வளர்ச்சி காரணமாக அழிந்து போகும் நிலையில் மலையக மக்களின் வரலாற்றை ஆவணப்படுத்தல் முக்கியமான நிலையாகும்.

மோகன்-ஹாட்ஸ் சமூக நல அபிவிருத்தி தாபனம் - F135
27.08.2022
நூலகக் கலந்துரையாடல்



நூலக நிறுவனத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தேன். நிறுவனப் பணியை முன்னெடுத்து வருபவர்களுடன் விரிவாக உரையாடி சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

செல்வராஜா லண்டன் - F136
27.01.2023
நூலகக் கலந்துரையாடல்



நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் பெயரளவில் விபரிக்க முடியாதவை. மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

கிசோக் - F137
27.01.2023
நூலகக் கலந்துரையாடல்



இன்று நூலகம்.com (மட்டக்களப்பு அலுவலகம்) வந்தேன். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதை அவதானித்தேன். ஆவணப்படுத்தல் மிகவும் அருமையான பணி. எனது நூல்கள் சிலவும், "செங்கதிர்" சஞ்சிகைகள் சிலவும் பதிவேற்றப்படவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். அவற்றைக் கொணர்ந்து பதிவேற்றவுள்ளேன்.

செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் - F138
14.09.2023
நூலகத்தை பார்வையிடல்



இன்று எழுத்தாளர் கலாபூஷணம், ஆய்வார்வலர் திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்களது எழுத்தாக்கத்தில் உருவான ஆறு நூல்களை Noolaham Foundation, Eastern Unit இல் தரவேற்றம் செய்வதற்காக மட்டக்களப்பு அரசடி நூலகத்தில் செயற்படும் அவர்களது அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளேன். இங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மிகவும் பொறுப்புடனும் சிறப்பாகவும்செயற்படுகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. நூலகம் பவுண்டேஷனின் சிறப்பான சேவை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வரப்பிரசாதமான விடயமாகும்.

திரு. எஸ். புண்ணியமுர்த்தி - F139
11.10.2023
நூலகத்தை பார்வையிடல்



நூலக நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு 20/06 முதல் இருந்தாலும் 2023 இ தான் நேரடித்தொடர்பு ஏற்படுத்த இயன்றது. இலங்கையின் வரலாறு, பண்பாடு தொடர்பாக ஆராய்ந்து வரும் எங்களைப் போன்ற அயல்நாட்டவருக்கு ஒரு கற்பகத்தருவாக நூலக இருந்து வருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முடிந்தளவு இந்த நூலகம் மற்றும் ஆவணகம் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்து ஆராய்ச்சி சமூகத்திடம் (தெரியாதவர்களுக்கு) கொண்டு செல்வேன் என்று உறுதியை இந்நேரத்தில் நான் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கல் பணியில் இயன்றவரை ஒரு தன்னார்வலராக இருப்பேன் என்ற எனது அவாவினையும் இங்கே கூற விரும்புகிறேன். தன்னலமற்ற தமிழ்ச்சமூகத்தின் இந்த அரிய பெரிய முயற்சியைப் பாராட்டி வணங்குகிறேன்.

ஜெ.கார்த்திக் - F140
25.10.2023
நூலகத்தை பார்வையிடல்



Noolaham does a fantastic job of preserving and archiving all Tamil books. Hope the Tamil community will extend its fill.
Support for Noolaham.
Keep up the good job.

D. Sangarapillai Manoharan - F141
11.01.2024
நூலகத்தை பார்வையிடல்



15.02.2024 அன்று நூலக நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தேன். நூலக நிறுவனம் செய்யும் பணியானது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடாக காணப்படுகிறது. இச்செயற்பாடானது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும். அலுவலக பணியாளர்கள் இன்முகத்துடன் வரவேற்று நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் தொடர்பான விளக்கத்தினை தந்தார்கள். இவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

"தம்பிராசா கணேசமூர்த்தி, ஓய்வுநிலை சமாதான நீதவான் (SLT)" - F142
15.02.2024
நூலகத்தை பார்வையிடல்