Feedback/8

From Noolaham Foundation
< Feedback
Revision as of 23:30, 31 December 2020 by Pireetha (talk | contribs)
Jump to navigation Jump to search

Amazing work, Best wishes.

Karayan Analanatha,
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



This is extremely important project . Keep it this important work.

Ahilan Arulanatham
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



பல புதிய விடயங்களை அறிய முடிந்தது. இந்த வேலையை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.


22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்தப்பணி எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.

எஸ். ஜெபநேசன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



இவ்விடயம் மிகவும் வேண்டியதொன்று பழமை பேணுவதிலும் பாதுகாப்பு தேடுவதும் இவ்விடயம் வரவேற்கப்படுவதும் கட்டாயமாகும். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் வேண்டுயது ஒன்றாகும்.

நா. கணேசலிங்கநாதன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



பழமைகள் எல்லாம் சென்றுவிடுமோ என்ற நிலையில் இக்கால அறிஞர்கள் நூல நிறுவனத்துடன் இணைந்து பழமைகளை பாதுகாப்பதில் பங்குகொள்வது மிகவும் மெச்சக்கூடிய விடயம். பழைய பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதை மேலும் பேணிபாதுகாக்க முயற்சிகள் எடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

எஸ். ரீ. அருள்குமரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஆவணங்களைத்தேடுவது அவற்றைப்பாதுகாத்து இணைய வழியில் சேமிப்பது இலகுவான காரியமல்ல ஆனால் கனகச்சிதமாக அந்தப்பெரும் பணியை செய்து வருகிறீர்கள் எங்களுடைய அந்தக்கால சங்கீத வகுப்பறை இன்றைக்கு தங்களின் ஆவணங்களால் இசைபாடக்கேட்டேன். கண்டேன். வாழ்த்துக்கள்.

தியாக.மயூரகிரிக்குருக்கள்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் என்பவற்றின் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்றைக்கு வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், என்பவற்றை வெளியில் கொணந்தமையை இட்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும் இது போன்ற பல விடயங்கள் நூலகத்தினூடாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்துவதன் மூலம் எமக்கு மிகவும், பேருதவியக இருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

க. வரதவேல்
22/02/2020 மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



1971 அண்டு ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டேன். 1990 ஆம் இடப்பெயர்வில் என்னிடமிருந்த அனைத்து நூல்களும் அழிந்து விட்டன. மீண்டும் 2010 மீள் குடியேறி 10 மாதமாக நான் வெளியிட்ட சஞ்சிகைகளை தேடியும் கிடல்க்கவில்லை.இன்று நூலகக் கண்காட்சியில் ஓர் ந்ல்லூர் சிறப்பிதழ் சஞ்சிகையைக்கண்டேன் என்மனம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. தொடர்ந்தும் நூலகத்திற்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாபூசனம் எம். எல். லாபிர்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



எமது வேர்களைத்தேடும் எம் எதிகால உறவுகளுக்கு எமது பெருமை சொல்லும் முயற்சியின் வீறு தொடரட்டும். வாழ்க எம் மரபுரிமைகளைத்தேடும் உம் முயற்சி.

யசிதரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி