ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் நினைவு நிகழ்வு நிகழ்த்தல் – கனடா

Published on Author Noolaham Foundation

ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் அவர்கள் ஒரு முன்னோடி தமிழ் ஆவணகக் காப்பாளர் (Archivist) ஆவார்.  இவர் ஈழத்து வரலாற்று, அரசியல், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்த ஒரு பெரும் சேகரிப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாகா முன்னின்று முன்னெடுத்தவர்.  ஆவணம், ஆவணப்படுத்தல், ஆவணகம் பற்றி போதிய விழிப்புணர்வு தமிழ்ச் சூழலில் இல்லாத ஒரு சூழலில் இவர் இப் பணியை முன்னெடுத்து இருந்தார்.  மேலும், இவர் உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அங்கு போய் தகவல் சேகரித்தார்,… Continue reading ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் நினைவு நிகழ்வு நிகழ்த்தல் – கனடா

த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

Published on Author Noolaham Foundation

தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்தை (Free Software and Free Culture Movement) கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான த. சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் “தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது” கிடைத்துள்ளது.  இது அவரது பரந்த பங்களிப்புக்கான ஒரு சிறு அங்கீகரிப்பே.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்க் கணிமைக்கு அவரது விரிவான பங்களிப்பை பற்றி இங்கும், இங்கும் மேலும் அறியலாம். களத்தில் உள்ள தமிழ்க் கணிமை… Continue reading த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

நூலகவியல் அறிமுக நூல்கள்

Published on Author Noolaham Foundation

– கோபி பிரசுரம் : நூல் தேட்டம் தகவல் கையேடு ஆண்டு : 2005 பதிப்பாளர் : அயோத்தி நூலக சேவைகள் நூலகவியலாளர் ந. செல்வராஜாவின் நூல் தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல் விபரப்பட்டியல் முயற்சியைப் பற்றிய அறிமுகக் கையேடு இதுவாகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ள இப்பிரசுரத்தில் நூல் தேட்டம் முயற்சி பற்றியும் அயோத்தி நூலக சேவைகள் பற்றியும் செல்வராஜாவின் நூலகவியற் பணிகள் பற்றியும் தகவல்களும் விபரங்களும் உள்ளன. நூல் விபரப்பட்டியலுக்கான பதிவுத் தாளும் பின்னிணைப்பாகக்… Continue reading நூலகவியல் அறிமுக நூல்கள்