கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”

தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது. ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன. இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம்… Continue reading தாய்வீடு அரங்கியல் விழா 2018

மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்

  கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது. “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம்,… Continue reading மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

Published on Author தண்பொழிலன்

“தந்தை செல்வா பற்றிய நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எதேச்சையாக நூலகமொன்றில், அவர் காலத்து விவரங்கள்  விரிவாகப் பதிவாகியுள்ள சுதந்திரன், ஈழநாடு ஆகிய நாளிதழ்களைக் கண்டெடுத்தோம். இப்போது நாம் செய்கின்ற ஆவணப்படுத்தல் முக்கியமானது தான் என்றாலும், கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்த ஆவணப்படுத்தலை விடாமல் செய்துவந்தோரின் முயற்சியில் தான் மேற்படி இதழ்கள் எமக்குக் கிடைத்தன என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என்று தெரிவித்தார் திரு.கோபிநாத். அவுஸ்திரேலியாவின் ஏரிபிசி (ATBC) வானொலிக்கு அவர் நூலகம் நிறுவனம் தொடர்பாக வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு… Continue reading இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

Published on Author தண்பொழிலன்

நூலகம் அருமையான, அரிய படைப்புக்களை பாதுகாத்து அணுக்கம் வழங்குகின்றது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், நூலக நிறுவனத்தின் வலைத்தளங்களிலுள்ள நூல்களையும் இதர சேகரங்களையும் மட்டுமே அணுகித் தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதனூடாக பலரும் தம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். திரு.அருண்மொழிவர்மன் மற்றும்  திரு.சுகந்தன் ஆகியோர் கனடாவின் சி.எம்.ஆர். வானொலிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்தனர். நூலகம் நிறுவனம், அது உருவான பின்னணி, அதன் துணைத்திட்ட வலைத்தளங்களான நூலகம் , ஆவணகம்,… Continue reading நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!