ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

நவம்பர் மாதம் 12ஆ ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் (Dr. Anja Oberländer, Vice-Director of Library & IT), திறந்த அறிவியல் குழுவின் தலைவர் திரு. மத்தியாஸ் லேண்ட்வேர் (Mr. Matthias Landwehr, Head of the Open Science Team), பொது மற்றும் கணக்கீட்டு மொழியியல் துறையின் பேராசிரியர் மிரியம்… Continue reading ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஒக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 03ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை அருகில் இடம்பெறுகின்ற “ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024” இல் நூலக நிறுவனத்தின் காட்சியறையினையும் பார்வையிடலாம். அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் என 5,843,832 பக்கங்களைக் கொண்ட 160,077 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நீங்களும் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு. நூலகம் (www.noolaham.org) என்பதை பிரதான வலைத்தளமாகக் கொண்டு பல்லூடக நூலகம்… Continue reading ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

160,000 ஆவணங்களைக் கடந்துள்ள நூலக நிறுவனம்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கப் பணிகள் மேலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு 2024 மார்ச் மாதத்தில் 150,000 ஆக இருந்த ஆவண எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரித்து 160,000 இனைக் கடந்துள்ளது! இப்போது 5.8 மில்லியன் பக்கங்களைக் கொண்ட 160,000+ ஆவணங்களை எண்ணிமப்படுத்தியுள்ள நூலக நிறுவனத்தின் சுவடியாக்கப் பயணத்தில் பங்கேற்க வாருங்கள்!

நூலக நிறுவனத்தின் “முன்னோர் ஆவணகம்” செயற்றிட்டத்தின் வழிகாட்டியாக செயற்படும் திரு. சரவணன் நடராசா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2024, ஒக்டோபர் மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நோர்வே இலிருந்து நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் திரு. நடராசா சரவணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், முன்னோர் ஆவணகம் மற்றும் ஈவ்லின் ரத்தினம் செயற்றிட்டங்களின் முன்னெடுப்பிற்கு தொடர்ச்சியாக ஆலோசனைகள் வழங்கி வருகின்றார். அதுமட்டுமன்றி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில்… Continue reading நூலக நிறுவனத்தின் “முன்னோர் ஆவணகம்” செயற்றிட்டத்தின் வழிகாட்டியாக செயற்படும் திரு. சரவணன் நடராசா அவர்களின் நூலக வருகை

நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

18.09.2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் ஈழத்து நூலகவியலாளரான  திரு. நடராஜா செல்வராஜா அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், “எண்ணிம நூலக மற்றும் ஆவணகம் துறை” சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்களித்து வருகிறார். ஆவணங்களுக்கான அனுமதி பெறல், அரிய ஆவணங்களின் ஆவணமாக்கம், நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இதழ்கள், சஞ்சிகைகள் பற்றிய தெளிவுப்படுத்தல் என… Continue reading நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

இந்தியாவின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர் திரு. சுந்தர் கணேசன் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

11 செப்டம்பர் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர், திரு. சுந்தர் கணேசன், உதவி பணிப்பாளர்களான, எஸ்.முத்து மாலதி, எம்.மணிகண்ட சுப்பு ஆகியோர் வருகை தந்திருந்தனர்.   நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏலவே நன்கறிந்த இவர்கள்,… Continue reading இந்தியாவின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர் திரு. சுந்தர் கணேசன் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

05 செப்டம்பர் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, 2024ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியா செப்டர் ஊடாக நூலகத்தின் செயல்பாட்டு சார்ந்து பங்களிப்பு செய்து வரும் கனகலிங்கம் மோகனகுமார் அவரது மனைவி பிரேமதர்ஷினி கனகலிங்கம் மற்றும் அவரோடு யாழ்ப்பாணத்திலிருந்து வைஷ்ணவி ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினார்.  … Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை