திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

Published on Author தண்பொழிலன்

‘திறந்த அணுக்க வாரம்’ (Open Access Week) எனும் பூகோள நிகழ்வு, வெற்றிகரமாக பத்தாவது தடவையாக இவ்வாண்டு ஒக்டோபர் 22 முதல் 28 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நீங்கள் இணையப் புலமையாளர் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்றால், “திறந்த அணுக்கம்” (open access) என்ற சொல்லாடலை அடிக்கடி கடந்திருப்பீர்கள். உயர் கல்வி நிறுவகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்ற புலமைசார் ஆய்வுகளை உடனடியாகவும், இலவசமாகவும் சகலரும் பயன்படுத்துமாறு இணைய உலகில் வெளியிடுவதே ‘தகவலுக்கான திறந்த அணுக்கம்’ என்பதன் பொருள். நமது… Continue reading திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”