யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும் நாளொரு பாெழுது மாறிவருகிறது. முக்கியமாக கணினித் திறன் இன்று ஒரு இன்றியமையாத கட்டாயத்திறனாக மாறிவிட்டது.”

aczs

“இந்நிலையில் எமது மாணவர்களுக்கு எதிர்காலத்திற்காகத் தயார்ப்படுத்துவதென்பது ஒரு சவாலான வியடமாகிறது. எவ்வாறு கற்பிப்பது, எவற்றைக் கற்பிப்பது என்பதனைத் தீர்மானிப்பதும் மிகச்சிக்கலாகிவருகிறது. முக்கியமாக பாடசாலைக் கல்விகளுக்கப்பால் மாணவர்கள் தேடித் தாங்களாகவே கற்கும் திறனை ஏற்படுத்தி அதனை ஊக்குவிக்கவேண்டியது மிகவேகமாக மாறிவரும் இவ்வுலகில் இன்றியமையாததாகிறது. இந்த நிலையில் இலத்திரனியல் கல்வி என்பது முக்கியம் பெறுகிறது.”

இலத்திரனியல் கல்விதொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களை ஒருங்கிணைத்து இன்று இலத்திரனியல் கல்வி தொடர்பாக என்னென்ன விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, இன்னும் நாங்கள் என்ன செய்யலாம் போன்றவிடயங்களைக் கலந்தாலோசிப்பதே  First Symposium on e-Learning for Tamil Medium Education (SETME2018) ஆய்வரங்கின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஆய்வரங்கில் நூலகம் நிறுவனமும் கலந்துகொள்ள இருக்கின்றது. நூலகத்தின் சார்பில், “கற்றல், கற்பித்தல், ஆய்வில்நூலகத்தின் நடிபங்கு” எனும் தலைப்பில், திரு.சி.சேரன், திரு.சோமராஜ் ஆகியோர் நிகழ்த்துகை ஆற்ற இருக்கின்றனர்.

துறைசார் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஹட்ச் களத்தில் (Hatch Kalam, 4th Floor, 218, Standly Road, Jaffna ) நாளை 13.10.2018 அன்று, காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை, SETME2018 ஆய்வரங்கு இடம்பெற இருக்கின்றது.