நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 2005 முதல் இன்று வரையான காலங்களில் நூலக நிறுவனம் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவந்த ஆரம்ப கால பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளாந்தம் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தல் என்பது முக்கிய… Continue reading நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இ. மயூரநாதன் இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத்… Continue reading நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

நூலக நிறுவன நிதியறிக்கை 2010

Published on Author Gopi

எங்கிருந்தும் எந்நேரமும் எல்லோரும் அணுகக் கூடியவை என்பதால் எண்ணிம நூலகங்கள் கல்விச் செயற்பாடுகளுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் மிகுந்த பயன்பாடுடையவை. அத்தகைய எண்ணிம நூலகமொன்றை அக்கறையுள்ள அனைவரும் இணைந்து தன்னளவில் முழுமையானதொன்றாக விரைவாக வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். அவ்வகையில் இலங்கைத் தமிழரின் மிகப் பெரும் எண்ணிம நூலகமான www.noolaham.org ஆனது நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. நூலக நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் இலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். நூலக வலைத்தளம் மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய பல செயற்றிட்டங்களையும் விழிப்புணர்வூட்டும்… Continue reading நூலக நிறுவன நிதியறிக்கை 2010

2010 இல் 3,109 மின்னூல்கள்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது. இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும். 2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது.  இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன. 2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினூடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை,… Continue reading 2010 இல் 3,109 மின்னூல்கள்

நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

Published on Author Noolaham Foundation

தமிழ் எண்ணிம நூலக (www.noolaham.org) வலைத்தளம் இன்றுடன் (11.01.2011)  ஏழு மில்லியன் தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது சுமார் 3 ஆண்டுகள், நான்கரை மாதங்களுக்கான புள்ளிவிபரம் ஆகும். நூலக வலைத்தளமானது மீடியாவிக்கியில் இயங்குகிறது. 27.08.2007 அன்று உள்ளிடப்பட்ட இத்தளம் 2007 செப்ரெம்பரில் இருந்து விரிவாக்கப்பட்டுவருகிறது. இப்பொழுது ஏறத்தாழ 8,500 மின்னூல் விபரப்பக்கங்கள் நூலகத் தளத்தில் உள்ளன. இவற்றில் 5,000 க்கும் அதிகமான பக்கங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளிடப்பட்டவையாகும். அவ்வகையில் நூலக வலைத்தளத்தின் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது.… Continue reading நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

Annual Report for 2009 Released

Published on Author Noolaham Foundation

The Noolaham Foundation’s Annual Report for 2009 is now available online. This is the second Annual Report published by the Foundation. And this report includes a message from the Board of Trustees, highlights of 2009 and financial details including complete donor details. Being the key accountability document of the Noolaham Foundation, it outlines the strategic decisions… Continue reading Annual Report for 2009 Released