திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகளை மீளவும் கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

திருகோணமலையில் கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களினால் பாதுகாக்கப்பட்டு வந்த திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நுாலக நிறுவனத்தினரால் எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தப்பட்டு, மீளவும் கையளிக்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி த.ஜீவராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் 27.06.2020 அன்று திருகோணமலையில் அமைந்ததுள்ள கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது. திருகோணமலை வரலாற்று ஆவணக்காப்பாளராக கருதப்படும் அமரர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் தஷ்ணகைலாய புராணம், திருகோணமலைப் புராணம், திருக்கரசைப் புராணம், கம்பசாத்திரம், பெரியவளமைப் பத்ததி, கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து அதனைப்… Continue reading திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகளை மீளவும் கையளிக்கும் நிகழ்வு

இந்திய தூதரகத்தினரின் நூலக நிறுவனத்திற்கான வருகை

Published on Author Noolaham Foundation

இந்திய தூதரகத்திலிருந்து நூலக நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியத் துணைத்தூதுவர் ச. பாலச்சந்திரன் (S. Balachandran) அவர்கள் 25 / 06 / 2020 அன்று வருகை தந்திருந்தார். அவருக்கு நூலக நிறுவன செயற்பாடுகள், அடைவுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். மேலும், இந்தியத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு வழங்கும் வசதிகள் பற்றியும் அதனைப்பயன்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார். நூலக நிறுவனம் சார்பில் நூலக நிறுவன ஆளுகை சபையை சேர்ந்த இ. மயூரநாதன், நூலக நிறுவன நலன்விரும்பி ஜெஹான்… Continue reading இந்திய தூதரகத்தினரின் நூலக நிறுவனத்திற்கான வருகை

ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு 24.06.2020. புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலாசாரகூடத்தில் காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள் மற்றும் பண்டைய தொன்மை கூறும் ஆவணங்கள் மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகளை ( 28 ) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது நூலக நிறுவனத்தின்… Continue reading ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு