இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன் நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய… Continue reading இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

2010 இல் 3,109 மின்னூல்கள்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது. இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும். 2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது.  இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன. 2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினூடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை,… Continue reading 2010 இல் 3,109 மின்னூல்கள்