நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.02.2024

Published on Author Loashini Thiruchendooran

14 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, பிரித்தானியாவிலிருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான சுதர்ஷன் வருகை தந்திருந்தார். இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். குறிப்பாக நூலக நிறுவனத்தின் ஈழத்து ஓலைச்சுவடி நூலகம் செயற்றிட்டம் மற்றும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பழமையான ஆவணங்கள் குறித்து நுணுக்கமாக கேட்டறிந்து கொண்டார். இவற்றுள் தனக்குத் தெரிந்த சில படைப்பாளர்களின் படைப்புகள்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.02.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 08.05.2024

Published on Author Loashini Thiruchendooran

08.05.2024, புதன்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான ராஜன் பாலா வருகை தந்திருந்தார். கடந்த 26 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்த போது நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  அதற்கமைவாக, நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவம் ஐக்கிய அமெரிக்காவிற்கான நூலக செப்டர் பதிவு நூலக செயற்பாடுகளுக்கான நிதி பங்களிப்பு ஆகிய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 08.05.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.05.2024

Published on Author Loashini Thiruchendooran

14 மே 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நோர்வேயிலிருந்து க. நிர்மலநாதன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி நிர்மலன் ஆகியோர் வருகைத் தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.      மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியைப் பாராட்டியதுடன், தென்மராட்சி… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.05.2024

நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

Published on Author Loashini Thiruchendooran

எதிர்கால சந்ததியினரை அமைதி, வாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியின் உலகத்தை நோக்கி வழிநடத்தக்கூடிய வகையில் மனிதகுலத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் அன்பையும் பற்றவைப்பதை தூர நோக்காகக் கொண்ட மனித நேயம் அறக்கட்டளையின் ஆதரவிற்கு நூலக நிறுவனத்தின் நன்றிகள். குறிப்பாக “தேவைப்படுபவர்களுக்கு தொண்டு மற்றும் சமூக சேவைகளை வழங்குதல்” என்ற தன்னுடைய குறிக்கோளின் கீழ் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற… Continue reading நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும்   சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. அவற்றுள் யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களை, அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை மையமாகக் கொண்டு, “யாழ்ப்பாணப் பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்” இனை 2022ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுச் செயற்றிட்டமாக ஆரம்பித்தது.   நோக்கம்: “பொதுசன நூலகத்திலுள்ள பத்திரிகைகள், சஞ்சிகைகள் உள்ளடங்களாக… Continue reading நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்