தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோரது நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நிறுவனம் சார்ந்த ஆவணமாக்க செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களை பார்வையிட்டதுடன் அதிலுள்ள ஆவணங்கள் பற்றியும் இவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

WhatsApp Image 2025-04-11 at 18.18.18_bd92e421 WhatsApp Image 2025-04-11 at 18.18.15_91f902b3

WhatsApp Image 2025-04-11 at 18.18.18_60f400c2 WhatsApp Image 2025-04-11 at 18.18.14_fec422d5

WhatsApp Image 2025-04-11 at 18.18.17_4722affd

மேலும் நூலக நிறுவனம் அதனது உருவாக்கம், செயற்பாடுகள் என்பன தொடர்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் அவர்களால் காட்சிப்படுத்தல் ஊடாக விளக்கம் கொடுக்கப்பட்டது

இவர்களுடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர், மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *