மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம். பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து… Continue reading மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

Published on Author Noolaham Foundation

நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும்,… Continue reading 7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்

Published on Author Noolaham Foundation

வணக்கம், ஆடி 2011,  இதழ் 04. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவனுமான சிவானந்தமூர்த்தி சேரன் யாழ் நீர்வேலியை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் அண்மையில் சர்வதேச அமைப்பான “ASHOKA FOUNDATION” இன் “ASHOKA YOUTH VENTURE” (அசோகாவின் இளம் முயற்சியாளர்) விருதினையும் பெற்றிருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக நூலக நிறுவன தன்னார்வ தொண்டராக ஆவணப்படுத்தலில் ஏற்பட்ட சுய விருப்பால் பணியாற்றி வருகின்றார். தற்போது நிறுவன இயக்குனர்களில்… Continue reading வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்

ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும்

Published on Author Noolaham Foundation

Thinakkural Sunday August 05 2012 ஊடகங்களிலே வலையூடகங்களின் வளர்ச்சியும் பயன்பாடும் இன்று அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் எமது வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் இந்த வலையூடகங்கள் (இணையத்தளங்கள்) பாரிய பங்களிப்பினை வழங்கி நிற்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றையும் அவர்களின் தனித்துவத்தையும் பாதுகாத்து நிற்கும் வலையூடகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது நூலகம் (www.noolaham.org) இணையத்தளம். நூலகம் வலைத்தளம் ஈழம் தொடர்பான எழுத்தாவணங்கள் துண்டுப்பிரசுரங்கள் முதல் நூல்கள் வரை அச்சில் வரும் அனைத்தையும் மின்வடிவாக்கி பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தளத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் வெளியிடும்… Continue reading ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும்

புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)

Published on Author Noolaham Foundation

சசீவன் கணேசானந்தன் சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான ‘தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள் www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம்… Continue reading புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)