நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

Published on Author Loashini Thiruchendooran

‘செங்கதிர்’ கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 ஆம் ஆண்டு வரையில் 61 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமைந்துள்ள இச் சிற்றிதழ்கள் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,… Continue reading நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகளை மீளவும் கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

திருகோணமலையில் கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களினால் பாதுகாக்கப்பட்டு வந்த திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நுாலக நிறுவனத்தினரால் எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தப்பட்டு, மீளவும் கையளிக்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி த.ஜீவராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் 27.06.2020 அன்று திருகோணமலையில் அமைந்ததுள்ள கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது. திருகோணமலை வரலாற்று ஆவணக்காப்பாளராக கருதப்படும் அமரர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் தஷ்ணகைலாய புராணம், திருகோணமலைப் புராணம், திருக்கரசைப் புராணம், கம்பசாத்திரம், பெரியவளமைப் பத்ததி, கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து அதனைப்… Continue reading திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகளை மீளவும் கையளிக்கும் நிகழ்வு

இந்திய தூதரகத்தினரின் நூலக நிறுவனத்திற்கான வருகை

Published on Author Noolaham Foundation

இந்திய தூதரகத்திலிருந்து நூலக நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியத் துணைத்தூதுவர் ச. பாலச்சந்திரன் (S. Balachandran) அவர்கள் 25 / 06 / 2020 அன்று வருகை தந்திருந்தார். அவருக்கு நூலக நிறுவன செயற்பாடுகள், அடைவுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். மேலும், இந்தியத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு வழங்கும் வசதிகள் பற்றியும் அதனைப்பயன்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார். நூலக நிறுவனம் சார்பில் நூலக நிறுவன ஆளுகை சபையை சேர்ந்த இ. மயூரநாதன், நூலக நிறுவன நலன்விரும்பி ஜெஹான்… Continue reading இந்திய தூதரகத்தினரின் நூலக நிறுவனத்திற்கான வருகை

ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு 24.06.2020. புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலாசாரகூடத்தில் காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள் மற்றும் பண்டைய தொன்மை கூறும் ஆவணங்கள் மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகளை ( 28 ) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது நூலக நிறுவனத்தின்… Continue reading ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

அவரசர வலை ஆவணமாக்கல் வேண்டுதல்: ருவிட்டர் hashtags யாகூ (yahoo) குழுக்கள்

Published on Author Noolaham Foundation

அண்மையில் டுவிட்டர் டிசம்பர் 11 இல் பழைய active இல்லாத கணக்குகள் எல்லாவற்றையும் மூடவுள்ளதாக கூறி உள்ளது.  இதனூடாக இலங்கைத் தமிழ் பேச்சும் சமூகங்கள் தொடர்பான பழைய பல பதிவுகளை நாம் இழந்துவிட வாய்ப்பு உள்ளது.  அந்த நீங்கள் முக்கியமாகக் கருதும் hashtags ஐ தயந்து எமக்கு அறியத் தரவும். யாகூ குழுக்கள் (yahoo groups) டிசம்பர் 14 இல் மூடவுள்ளன (shutting down).  இதனூடாக பதிவுகள் பொது அணுக்கம் இல்லாமல் ஆக்கப்படும்.  இலங்கைத் தமிழ் பேச்சும்… Continue reading அவரசர வலை ஆவணமாக்கல் வேண்டுதல்: ருவிட்டர் hashtags யாகூ (yahoo) குழுக்கள்

யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Published on Author Noolaham Foundation

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும்.  தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. 2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது.  தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள்,… Continue reading யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Tamil documentation related internship opportunity at UTSC

Published on Author Noolaham Foundation

University of Toronto Scarborough Library is undertaking a Digital Tamil Studies project.  Part of the project involves multimedia documentation of Tamil folklore in Scarborough and Greater Toronto Area.  UTSC Library Digital Scholarship Unit is offering an internship opportunity via the Young Canada Works at Building Careers in Heritage  program.  You will be contributing to and… Continue reading Tamil documentation related internship opportunity at UTSC