நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

Published on Author Loashini Thiruchendooran

‘செங்கதிர்’ கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 ஆம் ஆண்டு வரையில் 61 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமைந்துள்ள இச் சிற்றிதழ்கள் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விடுபட்ட சில இதழ்களையும், அவரது எழுத்தில் வெளியான “சமம்” மற்றும் “விளைச்சல்” ஆகிய இரு நூல்களையும் நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்காக, இதழின் ஆசிரியர் திரு.த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்) அவர்கள் இன்று (20.09.2023) புதன்கிழமை மட்டக்களப்பு நூலக அலுவலகத்தில் கையளித்தார்.

image5 image3

image1 image4

image2

விரைவில் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அவ்வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் பகிரப்படும்.

உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 212 231 292 | 0094 77 898 3285