நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

22 ஏப்ரல் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை நாகேந்திரன் வருகை தந்திருந்தார். இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், “நூலகத்தின் வட இலங்கை மருத்துவ… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

18 ஏப்ரல் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புவியியற்றுறையின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான திட்டமிடலாளர் செல்வராஜா ரவீந்திரன் மற்றும் இராசலிங்கம் மங்களேஸ்வரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், செல்வராஜா ரவீந்திரன் நூலகத்தின் அரிதான ஆவணங்கள் மற்றும் எண்ணிமப்படுத்தும் முறைகள் எண்ணிம சாதனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, தனது கலாநிதி கற்கைக்காக இலங்கையின் வடமாகாணத்தின்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

கடந்த 18.04.2024 அன்று காலமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு நூலக நிறுவனம் சார்பான அஞ்சலிகள். யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்த இவர், இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.  1994 முதல் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பல தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் 1998-99 காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையிலும், பின்னர் 2010 இல் வட… Continue reading கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு “சர்வதேச புத்தக தினம்”. புத்தகங்களைப் படிக்க மக்களை ஊக்குவிப்பதையும், வெளியீட்டை ஊக்குவிப்பதையும், எழுத்தறிவை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் வகையில் “உங்கள் வழியைப் படியுங்கள்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.  உலகின்… Continue reading என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 25.03.2024

Published on Author Loashini Thiruchendooran

25 மார்ச் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு லண்டனில் இருந்து வயிரவநாதன் சிவரதன், அச்சுதன் சிவகுமார் மற்றும் இ. தமிழரசன், ராஜி தமிழரசன் குடும்பத்தினரும், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ஞானேந்திரராஜா கஜேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். இவர்களுள் வயிரவநாதன் சிவரதன் என்பவர் 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் நூலக நிறுவனத்திற்கு நீண்ட காலமாக நிதிப்பங்களிப்புச் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அச்சுதன் சிவகுமார் என்பவர் 2007ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 25.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

Published on Author Loashini Thiruchendooran

20 மார்ச் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து லாவண்யா இலக்சுமணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.           இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள், நிறுவனத்தினது எதிர்காலத் திட்டங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும் நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

Published on Author Loashini Thiruchendooran

19 மார்ச் 2024, செவ்வாய்க்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்குக் கனடாவிலிருந்து இ. இளஞ்செழியன் அவர்கள் வருகை தந்திருந்தார்.        இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் நிறுவனத்தின் செயற்பாட்டுசார் வளர்ச்சியில் தானும் பங்களிப்பதாயும் குறிப்பிட்டு இருந்தார். இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமமாக்கமும்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024