இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நூலக நிறுவனமானது, அழிந்து போகும் நிலையில் இருக்கும் ஓலைச்சுவடிகளினை எண்ணிமப்படுத்தி வருகின்றது.
அந்தவகையில், எண்ணிமப்படுத்தலுக்குத் தேவையான ஓலைச்சுவடிகள் தனிநபர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டு எண்ணிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன.
மூல நன்கொடையாளர்களிடமிருந்து ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளும் முறைமை பற்றிய காணொளியின் இணைப்பினை இங்கு காணலாம்.
ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளல்
ஓலைச்சுவடிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க, நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில் நீங்களும் பங்களிக்கலாம்.
மேலதிக விடயங்களுக்கு நூலக நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தினை நாடவும்.