நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்