நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, கனடாவில் இறக்குமதி மற்றும் விநியோகம் (Import & Distribution) சார்ந்த வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பி.கஜேந்திரன் அவர்கள் 04.03.2024 திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்தார்.
இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகள், நூலக நிறுவனத்தின் பெளதீக ஆவணங்கள் (Physical Repository), நூலக நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான பத்திரிகைகள், நூல்கள் போன்றவற்றையும் பார்வையிட்டதுடன், நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இவருடனான சந்திப்பில், நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.