அழிவடைந்து போகும் ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தல்.

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நூலக நிறுவனமானது, அழிந்து போகும் நிலையில் இருக்கும் ஓலைச்சுவடிகளினை எண்ணிமப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், எண்ணிமப்படுத்தலுக்குத் தேவையான ஓலைச்சுவடிகள் தனிநபர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டு எண்ணிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன. மூல நன்கொடையாளர்களிடமிருந்து ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளும் முறைமை பற்றிய காணொளியின் இணைப்பினை இங்கு காணலாம். ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளல் https://youtu.be/pnf6FEMaqlM?si=Hvf5gbQk4LAmXCFu ஓலைச்சுவடிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க, நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில் நீங்களும் பங்களிக்கலாம். மேலதிக விடயங்களுக்கு நூலக நிறுவனத்தின் யூடியூப்… Continue reading அழிவடைந்து போகும் ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தல்.

நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் காணப்பட்ட மலாய் ஆவணங்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலாய் குடும்பங்களின் வசம் காணப்படுகின்றன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் Bacha Husmiya அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் ஆவணங்கள், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கப்பட்டு “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம் ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன. 1859 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 67 ஆவணங்கள் இப்பகுப்பினுள் தொகுக்கப்பட்டுள்ளன.… Continue reading நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு

Published on Author Loashini Thiruchendooran

இலங்கையின் மருத்துவ வரலாறு பல நூற்றாண்டுகளாக பல உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில நாட்டிற்கு தனித்துவமானவை. அத்தகைய மருத்துவ வரலாறு, வட இலங்கையைப் பொறுத்தவரையில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்பதனை ஆவணப்படுத்துவதற்காக நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டமே “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” (History of Medicine in Northern Sri Lanka Collection) . பொதுவாக மக்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் தெரியாதிருப்பினும், இச்செயற்றிட்டம் மருத்துவ வரலாறு மற்றும்… Continue reading நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு