நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

இலங்கையின் மருத்துவ வரலாறு பல நூற்றாண்டுகளாக பல உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில நாட்டிற்கு தனித்துவமானவை.

WhatsApp Image 2024-09-10 at 16.17.46அத்தகைய மருத்துவ வரலாறு, வட இலங்கையைப் பொறுத்தவரையில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்பதனை ஆவணப்படுத்துவதற்காக நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டமே “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” (History of Medicine in Northern Sri Lanka Collection) . பொதுவாக மக்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் தெரியாதிருப்பினும், இச்செயற்றிட்டம் மருத்துவ வரலாறு மற்றும் வரலாற்றுக் காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் தரத்திற்காக உழைத்தவர்கள் பற்றிய பெரும் விழிப்புணர்வை தோற்றுவிப்பதாக அமைகின்றது.

அதனடிப்படையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Prof.Sreeharan and International Medical Health Organization (IMHO) ஆகியோரின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம், வட இலங்கையில் உள்ள மருத்துவ வரலாறு தொடர்பான,
– கையெழுத்துப் பிரதிகள்
– புத்தகங்கள்
– புகைப்படங்கள்
– வாய்மொழி வரலாறுகள்
போன்ற பல ஆவணங்களைச் சேகரித்து எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

செயற்றிட்ட பயன்கள்:

* வட இலங்கை மருந்துவ வரலாற்றின் மதிப்பை தெரிந்து கொள்ளலாம்.
* வட இலங்கையில் மருத்துவ துறையில் உள்ள முக்கிய நபர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். (தமிழ் மருத்துவ உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவிய ஏராளமான அறிஞர்கள் பற்றி அறியலாம்).
* வட இலங்கை சேகரிப்பில் மருத்துவ வரலாற்றை மீண்டும் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
* வட இலங்கையின் மருத்துவ வரலாற்றுத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.

இதுவரையான செயற்றிட்ட அடைவுகள்

இச்செயற்றிட்டத்தினூடாக சேகரிக்கப்படுகின்ற ஆவணங்கள்,
> Developmental History of Western Medicine
> Developmental History of Non Allopathic Medicine
> Healthcare Institutions
> Diseases and Specialities
> Personalities and Communities
எனப் பிரதானமாக வகைப்பாடு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றினடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 42 சேகரிப்புகள் வட இலங்கை மருத்துவ வரலாற்று வலைவாசலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

1. பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்- 39
2. பதிவேற்றப்பட்ட வாய்மொழி வரலாறுகள்-2
3. பதிவேற்றப்பட்ட ஒலிப்பதிவு-1

ஆகையால் வட இலங்கை மருத்துவம் அதனது வரலாறு தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள், ஆவணப்படுத்த விரும்புபவர்கள் நூலகத்தின் இச்செயற்றிட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும்.

வலைத்தளத்தைப் பார்வையிட : https://tinyurl.com/m38c784w

நூலக வலைத்தளத்தில் வட இலங்கை மருத்துவ வரலாற்று வலைவாசலில் இணைக்கப்பட்ட ஆவணங்களில் தவறவிடப்பட்ட ஆவணங்கள் தங்களிடமிருந்தால் அல்லது வேறு வழிகளில் கிடைக்கப்பெற்றால், எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஆவணப்படுத்தலினை பூரணப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *