ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment
நவம்பர் மாதம் 12ஆ ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் (Dr. Anja Oberländer, Vice-Director of Library & IT), திறந்த அறிவியல் குழுவின் தலைவர் திரு. மத்தியாஸ் லேண்ட்வேர் (Mr. Matthias Landwehr, Head of the Open Science Team), பொது மற்றும் கணக்கீட்டு மொழியியல் துறையின் பேராசிரியர் மிரியம் பட் (Prof. Miriam Butt, Professor for General and Computational Linguistics, Department of Linguistics) மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான டாக்டர் சர்வேஸ்வரன் (Dr. Kengatharaiyer Sarveswaran, Senior Lecturer in Computer Science, University of Jaffna), டாக்டர் அன்ரூ சார்ல்ஸ் ((Dr. Andrew Charles, Senior Lecturer in Computer Science, University of Jaffna) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
009 (1)
நிறுவனம் சார்ந்த ஆவணமாக்க செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
அதுமாத்திரமின்றி, எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறை துறையினரால் எண்ணிமமாக்கல் முறைகள் மற்றும் எண்ணிமமாக்கல் கருவிகள் குறித்தும், எண்ணிம நூலக மற்றும் ஆவணக துறையினரால் நூலக வலைத்தள பதிவேற்றம் சார்ந்த செயற்பாடுகள், பதிப்புரிமையாளர் அனுமதி, உசாத்துணை சேவை, பயனர் சேவைகள் குறித்தும் இவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
010
IMG_8380 (1)
மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறை தலைவர், குறிப்பிட்ட துறைசார்ந்து இடம்பெறக்கூடிய வாய்மொழி வரலாறுகள், காணொளிகள் சார்ந்த எடிட்டிங் வேலைகள் பற்றி இவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களை பார்வையிட்டதுடன் அதிலுள்ள ஆவணங்கள் பற்றியும் இவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
IMG_8359 (1)
நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிட்ட பின்னர், நூலக நிறுவனம் அதனது உருவாக்கம், செயற்பாடுகள் என்பன தொடர்பில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் அவர்களால் காட்சிப்படுத்தல் ஊடாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது
இவர்கள்,
* நூலகத்தின் பதிப்புரிமை செயற்பாடுகள்
* திறன் மேம்பாடு சார்ந்த இணையவழி பயிற்சிப்பட்டறை
போன்ற விடயங்கள் சார்ந்த பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG_8411 (1) IMG_8400 (1)
இவர்களுடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.
3 (2) 1t (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *