19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் காணப்பட்ட மலாய் ஆவணங்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலாய் குடும்பங்களின் வசம் காணப்படுகின்றன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் Bacha Husmiya அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் ஆவணங்கள், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கப்பட்டு “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம் ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன.
1859 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 67 ஆவணங்கள் இப்பகுப்பினுள் தொகுக்கப்பட்டுள்ளன.
இவை,
– 36 ஆவணங்கள் மலாய் மொழியிலும்,
– 18 ஆவணங்கள் ஆங்கில மொழியிலும்,
– 12 ஆவணங்கள் தமிழ் மொழியிலும்
காணப்படுகின்றன.
கல்வி, வரலாறு, அரசியல், மொழி, ஆன்மீகம், சட்டம், சமூகவியல், வாழ்வியல், விளையாட்டு போன்ற விடயங்கள் சார்ந்த கவிதை, காவியம், கண்காட்சி, கருத்தரங்கு, பாடல்கள், உரை, ஆய்வறிக்கை என பல்வகைத்தன்மையான ஆவணங்களை இச்சேகரத்தினுள் காண முடியும்.
மேலும், இவ் ஆவணங்களுள் பெரும்பாலானவை கையெழுத்து ஆவணங்களாக இருப்பதுடன், அவை திருமணப் பதிவுகள், கடிதங்கள், மந்திரங்கள் எனப் பல விடயங்களை உள்ளடகியுள்ளன. அத்துடன் இச்சேகரத்திலுள்ள அனைத்து ஆவணங்களும் பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதியுடன் நூலக வலைத்தளத்தினூடாக வெளியிடப்பட்டிருக்கிறன.
வலைவாசல்:மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்: https://tinyurl.com/2s3ba4t2