ஒக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 03ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை அருகில் இடம்பெறுகின்ற “ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024” இல் நூலக நிறுவனத்தின் காட்சியறையினையும் பார்வையிடலாம்.
அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் என 5,843,832 பக்கங்களைக் கொண்ட 160,077 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நீங்களும் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு.
நூலகம் (www.noolaham.org) என்பதை பிரதான வலைத்தளமாகக் கொண்டு பல்லூடக நூலகம் (www.noolaham.media), பள்ளிக்கூட நூலகம் (www.noolaham.school), நூலக நுட்பம் (www.noolaham.tech) என்பன ஊடாக பலவிதமான இலங்கை தமிழ் பேசும் சமூகம் சார் ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள நூலக நிறுவனமானது, தன்னார்வலர்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற நிலையில், இப்புத்தக கொண்டாட்டத்தின் ஊடாக ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள நீங்களும் நிறுவனத்தின் ஆதரவாளர்களாக முடியும்.
குறிப்பாக,
* உங்களிடமுள்ள ஆவணங்களை ஆவணப்படுத்த விரும்பினால் நூலக பணியாளர்களிடம் நேரடியாக கையளிக்க முடியும்.
* நூலக வலைத்தளத்தில் உங்களது ஆவணத்துக்கான அனுமதியினை வழங்க முடியும்.
* நூலகத்தின் ஆவணமாக்கல் செயற்பாடுகளில் தன்னார்வலராக இணைந்து கொள்ள முடியும்.
எழுத்தாளர்கள், வெளியீட்டகத்தார் மற்றும் வாசகர்கள் என அனைவரினது பங்களிப்பும் நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் முக்கியம் பெறுவதனால், புத்தகங்களை கொள்வனவு செய்வது மட்டுமன்றி எமது ஆவணங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு கைகொடுக்க வாருங்கள்.
– ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை, மட்டக்களப்பு
– ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 03 வரை
– காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை