கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02
“வில்வளைவான அமைப்புடைமையாற் குளங்களோடு சேர்ந்த பல தமிழ்ப்பெயர்கள் ஊர்ப்பெயராயின. பொத்துவில், தம்பிலுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இனுவில், மல்வில், மந்துவில் இன்னும் பல இதற்கு உதாரணமாகும். செழிப்பான கியாதி நிறைந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ்ப்பாணக்குடா நாட்டிலமைந்த ஊர்களில் புகழ்பூத்த ஒரு ஊர், கொக்குவில். கொக்கு ஒரு பறவை, ஒரு பூமரம், ஒரு குதிரை, மாமரம் என்றெல்லாம் பொருள்படும்.” “கொக்குவில் நம் ஊர்” நூலுக்கான தன் அணிந்துரையில் யாழ்ப்பாணத்துக் கொக்குவில் பதியை இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார் புலோலி முருகவே.… Continue reading கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02