“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ… Continue reading புத்தகங்களுக்கு ஒரு நாள்!