மலையகம் பல இலக்கியவாதிகளை பிரசவித்த மண்.மலையக இலக்கியம் பற்றி மிக முக்கியமான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. வெளிவந்த நூல்களில் கலாநிதி.க.அருணாசலத்தால் எழுதப்பட்டு 1994இல் வெளியிடப்பட்ட “மலையகத் தமிழ் இலக்கியம்” குறிப்பிடத்தக்க ஒன்றெனக் கருதலாம். தமிழ் மன்றத்தின் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் ஆசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முதுமுறை விரிவுரையாளர் என்பது அதிக கவனிப்பைப் பெற்றுக்கொள்கிறது.
இந்நூலில் ஐந்து அத்தியாயங்கள் அடங்குகின்றன. “தோட்டத்தொழிலாளர்கள் ஒரு அறிமுகம்” எனும் முதலாவது அத்தியாயம், மலையகத்தமிழரின் வரலாற்றுப்பின்னணி , அவர்கள் சந்தித்த இன்னல்கள் ஆகியவற்றைக் கூறுகின்றது. இரண்டாவது அத்தியாயம், மலையகத் தமிழிலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக்கூறுகின்றது. அடுத்த அத்தியாயங்கள் முறையே நாட்டாரியல், கவிதை, புதுக்கவிதை என்பவற்றைப் பற்றி விவரிக்கின்றது.
சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையாப்பிள்ளை, சாரல்நாடன், ஏ.பி.வி.கோமஸ், முதலான குறிப்பிடத்தக்க மலையக இலக்கியவாதிகளும், கொழுந்து, மல்லிகை முதலான மலையக சஞ்சிகைகளும், அவற்றின் பின்புலத்திலான மலையக இலக்கியம் தொடர்பான ஆய்வுகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மலையக இலக்கியம் தொடர்பான முக்கியமான அறிமுக நூலாகத் திகழும் இந்நூல், இலங்கையின் நவீனத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விளக்கத்தை வழங்குவதில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
இந்நூலைப் படிக்க: இங்கு அழுத்தவும்.
டி.எம்.பீர்முகம்மது -“டீயெம்பி” பங்களிப்பு பற்றி ‘மலையக இலக்கியம்-தோற்றமும் வளர்ச்சியும்” அத்தியாயத்தில் உள்ளதா?,பார்த்துச்சொல்வீர்களா?(இவர், நீங்கள் குறித்துள்ளபெயர்களுக்கு முன்னையவர்) நன்றி.