நூலக நிறுவனப் பணியாளர்கள் நால்வர் “நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா” பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

கடந்த 28.06.2024 வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில், இலங்கை நூலகச் சங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்பட்ட நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமாவினை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நான்கு நூலகப் பணியாளர்கள் பட்டம் பெற்றிருக்கின்றனர். நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் புகழினி பிரியலக்சன், மதுராங்கி விநாயகமூர்த்தி, அபர்ணாங்கி சிவதீபன், விக்னேஸ்வரன் குருபரன் ஆகியோரே இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளனர். நூலக நிறுவனத்தின் பணியாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கோடு… Continue reading நூலக நிறுவனப் பணியாளர்கள் நால்வர் “நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா” பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

Published on Author Loashini Thiruchendooran

வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு “சர்வதேச புத்தக தினம்”. புத்தகங்களைப் படிக்க மக்களை ஊக்குவிப்பதையும், வெளியீட்டை ஊக்குவிப்பதையும், எழுத்தறிவை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் வகையில் “உங்கள் வழியைப் படியுங்கள்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.  உலகின்… Continue reading என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

Published on Author Loashini Thiruchendooran

20 மார்ச் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து லாவண்யா இலக்சுமணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.           இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள், நிறுவனத்தினது எதிர்காலத் திட்டங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும் நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

Published on Author Loashini Thiruchendooran

19 மார்ச் 2024, செவ்வாய்க்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்குக் கனடாவிலிருந்து இ. இளஞ்செழியன் அவர்கள் வருகை தந்திருந்தார்.        இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் நிறுவனத்தின் செயற்பாட்டுசார் வளர்ச்சியில் தானும் பங்களிப்பதாயும் குறிப்பிட்டு இருந்தார். இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமமாக்கமும்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

Published on Author Loashini Thiruchendooran

திருகோணமலையிலிருந்து வாராந்தம் வெளிவந்த ‘மலைமுரசு’ பத்திரிகையின் இதழ்களை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இப் பத்திரிகை வார இதழாக 29.07.2012 வெளிவர ஆரம்பித்தது. 22.04.2016 வரை வெளிவந்த இப்பத்திரிகையின் 180 இதழ்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  திருகோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாசார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ்விதழ்கள் வெளிவந்துள்ளன.   இக்காத்திரமான பத்திரிகையின் உரிமையாளரும், பிரதம ஆசிரியருமான கலாநிதி ஶ்ரீஞானேஸ்வரன்… Continue reading நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர்.     இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை… Continue reading நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

Published on Author Loashini Thiruchendooran

‘செங்கதிர்’ கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 ஆம் ஆண்டு வரையில் 61 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமைந்துள்ள இச் சிற்றிதழ்கள் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,… Continue reading நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை