Noolaham: Preserving Lanka’s Tamil language heritage digitally

Published on Author Loashini Thiruchendooran

The Sunday Times பத்திரிகையின் துணை ஆசிரியர் Shannine Mariana Daniel அவர்கள் “Noolaham: Preserving Lanka’s Tamil Language heritage digitally” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை த சண்டே டைம்ஸ் (The Sunday Times) செய்தித்தாளில் 29.05.2022 அன்று வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், பணிகள், உள்ளடக்கங்கள், வலைத்தள பதிவேற்றங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட Shannine Mariana Daniel அவர்களுக்கு… Continue reading Noolaham: Preserving Lanka’s Tamil language heritage digitally

Noolaham Foundation preserves the past to enrich the future – lankabusinessonline.com

Published on Author Noolaham Foundation

எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜெகன் அருளையா அவர்கள் “Noolaham Foundation preserves the past to enrich the future” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் செய்தித் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், விழுமியங்கள், பணிகள், தேவைகள், எதிர்காலத் திட்டம் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட ஜெகன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

Published on Author தண்பொழிலன்

“இனமுறுகல் வெடித்த 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் அறிவுசார் வளங்கள் இல்லாமல் போன மிக மோசமான இழப்பாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒன்றாக இந்நிகழ்வு சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், 97,000 புத்தகங்களோடு எரிந்தழிந்து போன யாழ் நூலகம், இலங்கையின் ஆவணப்படுத்தல் பாரம்பரியத்தின் மிகப்பெரிய அங்கமொன்றை இலங்கை இழந்த மாபெரும் இழப்பு அது. அப்படியொரு அனர்த்தம் மீள நிகழக்கூடாது என்பதே 2005 இல் எண்ணிம நூலகம் உருவானதன் முக்கியமான… Continue reading இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

Published on Author தண்பொழிலன்

“தந்தை செல்வா பற்றிய நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எதேச்சையாக நூலகமொன்றில், அவர் காலத்து விவரங்கள்  விரிவாகப் பதிவாகியுள்ள சுதந்திரன், ஈழநாடு ஆகிய நாளிதழ்களைக் கண்டெடுத்தோம். இப்போது நாம் செய்கின்ற ஆவணப்படுத்தல் முக்கியமானது தான் என்றாலும், கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்த ஆவணப்படுத்தலை விடாமல் செய்துவந்தோரின் முயற்சியில் தான் மேற்படி இதழ்கள் எமக்குக் கிடைத்தன என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என்று தெரிவித்தார் திரு.கோபிநாத். அவுஸ்திரேலியாவின் ஏரிபிசி (ATBC) வானொலிக்கு அவர் நூலகம் நிறுவனம் தொடர்பாக வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு… Continue reading இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

Published on Author தண்பொழிலன்

நூலகம் அருமையான, அரிய படைப்புக்களை பாதுகாத்து அணுக்கம் வழங்குகின்றது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், நூலக நிறுவனத்தின் வலைத்தளங்களிலுள்ள நூல்களையும் இதர சேகரங்களையும் மட்டுமே அணுகித் தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதனூடாக பலரும் தம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். திரு.அருண்மொழிவர்மன் மற்றும்  திரு.சுகந்தன் ஆகியோர் கனடாவின் சி.எம்.ஆர். வானொலிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்தனர். நூலகம் நிறுவனம், அது உருவான பின்னணி, அதன் துணைத்திட்ட வலைத்தளங்களான நூலகம் , ஆவணகம்,… Continue reading நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இ. மயூரநாதன் இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத்… Continue reading நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

Published on Author Noolaham Foundation

நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும்,… Continue reading 7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்