தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது. ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன. இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம்… Continue reading தாய்வீடு அரங்கியல் விழா 2018

அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

Published on Author தண்பொழிலன்

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 1981 யூன் 1. அன்று நள்ளிரவிலேயே தமிழரின் கல்விச்சொத்தான யாழ்ப்பாண நூலகம், திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அதன் விளைவையொத்த எதிர்பாராத இன்னொரு சம்பவத்தை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சந்தித்திருக்கிறது பிரேசில். அந்நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்திருந்த தேசிய  அருங்காட்சியகம், கடந்த 2018 செப்டம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்தொழிந்து போயிருக்கிறது.   ரியோ டி ஜெனிரோவின் அருங்காட்சியகம், அங்கிருந்த மிகப்பழைய கட்டிடங்களுள் ஒன்று. கடந்த 1892இல் அருங்காட்சியகமாக… Continue reading அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

Published on Author தண்பொழிலன்

இலங்கைப் பத்திரிகைச் சூழலைப் பொறுத்தவரை, சரிநிகர் மிக முக்கியமான மாற்று இதழ். “சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் வரிகளிலிருந்து தனக்கான பெயரைச் சூடியிருந்தது இவ்விதழ். 2001 வரை பல்வேறு செய்திகளைச் சுமந்துவந்த சரிநிகர், இலங்கையின் போர்க்கால சூழலில், மாற்றுக்கருத்துக்களுக்கு மாத்திரமன்றி, சிறுகதை, கவிதை முதலியவற்றிலும் பல பரிசோதனைகள் இடம்பெற இடமளித்து, ஈழத்து இலக்கியத்தையும் செழுமைப்படுத்தியது. 1990 யூன் மாதம் மாத இதழாக வெளிவர ஆரம்பித்த இது, பின்னர் வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. சரிநிகரின் ஆறாவது… Continue reading சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04