தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது.

thaiveedu-drama-sep-18

ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன.

இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம் நிறுவனமானது இடைவேளை நேரத்தில் உணவுப்பண்டங்கள் விற்று நிதி சேகரிப்பு நிகழ்வை நிகழ்த்தவுள்ளது.இதன் மூலம் பெறப்படும் வருமானம் , செலவுகள் கடந்து நூலக வளர்ச்சிக்கே உதவுகின்றது.உங்களது தொடர்ச்சியான ஆதரவை நூலக நிறுவனம் வேண்டுகின்றது.

செப்ரெம்பர் 30ம் நாள் இரு காட்சிகளாக (பி.ப. 1:30மணி, மாலை 6:30 மணி) பிளாட்டோ மார்கம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கான சீட்டுகளைப் பெறவும் மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ளவும் திரு.டிலிப்குமார் (416 857 6405) அவர்களைத் தொடர்புகொள்ளவும்.