கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.

 

42178441_287295435204703_2435879586551037952_n

யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின் இராக இசை, கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரி வழங்கும் நாட்டியாஞ்சலி, சோக்கல்லோ சண்முகம் குழுவினரின் வில்லடிப்பாட்டு, கனடிய நாகப்பறையினர் வழங்கும் பறையின் ஓசை, சிவாஜினியின் மாணவர்களின் நடனம் என்பன இடம்பெற இருக்கின்றது.

 

வழமை போல இம்முறையும் நூலகம் நிறுவனம் நன்கொடை சேமிப்பதற்கான அனுமதியை யாழ் இந்துக்கல்லூரி சங்கம் வழங்கியுள்ளது. அதற்கு அவர்களுக்கு எம் நன்றிகள். அதேபோல், இம்முறையும் நிதி சேகரிப்பில் விற்பனை செய்வதற்கான சிற்றுண்டிகளை, திரு.பாபு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அன்னாருக்கு எம் நன்றிகள்.

நுழைவுச்சீட்டு விவரங்களுக்கு மேற்குறிப்பிடப்பட்டோரைத் தொடர்பு கொள்ளவும்.