மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம். பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து… Continue reading மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

சமகால ஈழத்தின் புலம்பெயர் பெண் எழுத்தாளரான “ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 23/09/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தார். {{ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களினையும் எண்ணிம ஆவணப்படுத்தி நூலக நிறுவனத்தினூடாக பகிர்வதற்கும் சமூகம் சார்ந்து ஆவணப்படுத்தலை மேற்கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

“சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதி ‘சூரியா’ நிலையத்தினால் 30-06-2015 அன்று லேடி மன்னிங் றைவ், மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் தொடர்பான முன்னேற்றம், அபிவிருத்தியில் பல பெண்கள் மற்றும் புத்தியீவிகளின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் ‘சூரியா’ நிலையம் பல்வேறு பெண்ணியம் சார்ந்த வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் பெண்ணியம் சார்ந்து… Continue reading “சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்