கடந்த 18.04.2024 அன்று காலமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு நூலக நிறுவனம் சார்பான அஞ்சலிகள்.
யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்த இவர், இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். 1994 முதல் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பல தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் 1998-99 காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையிலும், பின்னர் 2010 இல் வட மாகாணசபையிலும் ஆலோசகராகப் பணியாற்றி, பல விளையாட்டுப் பயிற்சி வகுப்புக்களை நடத்தியவர். 2012 இல் SERVE eLearning Institute ஐ யாழப்பாணத்தில் தொடங்கி 2017 வரை நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உயரம் பாய்தல் வீரரான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்று உலகறியும் இவரது படைப்புகளை, நூலக நிறுவனம் ஆவணப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக உயரம் பாய்தல், நீளம் பாய்தல், தடை தாண்டல், தட்டெறிதழ், 400 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 10 மீற்றர் ஓட்டம், கோல் ஊன்றிப் பாய்தல், அஞ்சல் ஓட்டம் என பல விளையாட்டுக்களில் இவர் பெற்ற 51 சான்றிதழ்களையும், தனது சான்றிதழ்களை யாழ் மத்திய கல்லூரி அதிபர் திரு எஸ். கே, எழில்வேந்தன் அவர்களிடம் ஒப்படைத்த போது எடுக்கப்பட்ட 2 ஒளிப்படங்களையும் மேலும், நூலக நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட இவரது ஆறு மணிநேர வாய்மொழி வரலாற்றுப் பதிவு என்பவற்றை பல்லூடக நூலகம் (www.noolaham.media) வலைத்தளத்தில் இலகுவாகவும் இலவசமாகவும் அனைவரும் அணுக முடியும்.
நா. எதிர்வீரசிங்கம் சேகரத்தைப் பார்வையிட:
புகழ்பெற்ற நபர்களின் வாய்மொழி வரலாறுகளை நீங்களும் ஆவணப்படுத்திவிட முன்வந்தால், நூலக நிறுவனம் உதவக் காத்திருக்கிறது.